மனித உரிமைகள் ஆணைய அரங்கத்தில் நடைபெற்ற ‘புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பு’-க்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி

சென்னை: மாநில மனித உரிமைகள் ஆணையம், தமிழ்நாடு மற்றும் ஒடிசா மாநில மனித உரிமைகள் ஆணையம் இணைந்து, தமிழ்நாடு மாநில அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை மற்றும் ஒடிசா மாநில அரசின் தொழிலாளர் துறை இடையிலான ‘புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பு’-க்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்துவதற்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி, தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் அரங்கத்தில், இன்று 13.04.2023 காலை 10.00 மணி முதல் மதியம் 01.15 மணி வரை நடைபெற்றது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கான நிகழ்ச்சி, தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் பாஸ்கரன், ஒடிசா மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நீதியரசர் சத்ருஹன புஜாரி, தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர்கள் ராஜ இளங்கோ மற்றும் கண்ணதாசன் ஆகியோரது முன்னிலையில் நடைபெற்றது.

மேலும், இந்நிகழ்ச்சியில் ஒடிசா மாநில அரசின் தொழிலாளர் துறை ஆணையர் மற்றும் செயலாளர் சந்தானகோபாலன், ஒடிசா மாநில அரசின் தொழிலாளர் துறை ஆணையர் நாயக், ஒடிசா மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் புலனாய்வு துறை இயக்குநர் / காவல் துறை சிறப்பு இயக்குநர் பிரனபிந்து ஆச்சார்யா, தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் புலனாய்வுத் துறை இயக்குநர் மற்றும் காவல் துறை தலைவர் டாக்டர் மகேந்தர் குமார் ரத்தோட், காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரனும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

செந்தில்குமாரி, கூடுதல் ஆணையர் மற்றும் வேலாம்பிகை துரை, கூடுதல் ஆணையர் தமிழ்நாடு தொழிலாளர் துறை ஆகியோர் தங்களது கருத்துக்களை வழங்கினர். தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் செயலாளர் விஜயகார்த்திகேயன், வரவேற்புரையும், முரளிதரன், பதிவாளர் / மாவட்ட நீதிபதி அவர்கள் நன்றியுரையும் வழங்கினர். இக்கூட்டத்தின் பங்கேற்பாளர்களின் வரைவுகளை ஆய்வு செய்த பிறகு, தமிழ்நாடு அரசு மற்றும் ஒடிசா அரசு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய, வரும் நாட்களில் பரிசீலிக்கும்.

Related posts

கருவின் பாலினம் அறிவது, அறிவிக்கும் செயலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழ்நாடு அரசு

பாவூர்சத்திரத்தில் நடுவழியில் பஞ்சராகி நின்ற ஒன் டூ ஒன் அரசு பஸ்: பயணிகள் அவதி

மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிவால் பண்ணவாடி நீர்த்தேக்க பகுதியில் முழுமையாக தெரியும் நந்தி சிலை