வாழ்வில் வளம் சேர்க்கும் “ராம நவமி’’


“அனுமான் அஞ்சனா சூனுஹ வாயு புத்ரோ மஹாபலஹ
ராமேஷ்டஹா பல்குண சக கிங்காக்க்ஷோ அமித விக்ரமஹ
ஊத்வதிக் கிரமணச்சைவ சீதாசோக விநாசனஹ
லக்ஷ்மண ப்ராண தாதாச தசக்ரீவச்ச தர்பஹ
த்வாதசாதானி நமோ நி கபீந்தர்ஸ்ய மஹாத்மனஹ ஸ்வாபகாலேபடேந்நித்யம் யாத்ரா தாலே விசேஷதஹ தஸ்ய ம்ருத்யு பயம் நாஸ்தி ஸர்வத்ரய விஜயி பவேத்’’
“ஸர்வ கல்யாண தாதாரம் ஸர்வாபத் கநவாரகம்
அபார கருணாமூர்த்திம் ஆஞ்ஜநேயம் நமாம்யஹம்”

எல்லா உலகங்களுக்கும் நாயகனாக விளங்கும் அருள்மிகு கோதண்டராமர், சீதாதேவி, இலக்குமணருடன் அருள்தரும் ருக்மணி – சத்யபாமா ஸ்ரீ வேணுகோபாலருடன் குடிகொண்டுள்ள திருத்தலங்கள் தொண்டை நாட்டில் பல உள்ளன. அவற்றில் சிறப்பு வாய்ந்த சென்னை நங்கநல்லூர், ராம்நகரில் அமைந்துள்ள ஆலயத்தில், அருள்மிகு ஆதிவ்யாதிஹர பக்த ஆஞ்சநேயர் விஸ்வரூப தரிசனமாக பக்தர்களுக்கு காட்சி தருவது இத்திருத்தலத்தில் மட்டுமே உள்ள சிறப்பம்சமாகும்.
இத்திருக்கோயிலில் ஸ்ரீ ராமநவமி விழா வழக்கம்போல் இவ்வாண்டும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

இத்தருணத்தில், அருள் வழங்கும் அருள்மிகு கோதண்டராம சுவாமிக்கு, லட்சார்ச்சனையும், சிறப்பு யாகமும் பங்குனி மாதம் 28ம் நாள், 10.04.2024 புதன்கிழமை முதல் சித்திரை 5ம் நாள், 18.04.2024 வியாழக்கிழமை வரை விழாக்கள் நடைபெற உள்ளது. 10.04.2024 புதன்கிழமை அன்று, லட்சார்ச்சனை பூர்வாங்கம் ஆரம்பம். (லட்சார்ச்சனை), அதனை தொடர்ந்து 11.04.2024 வியாழக்கிழமை அன்று ஸ்ரீ கோதண்டராமருக்கு சந்தனக்காப்பு அலங்காரம், தீப ஆராதனை, லட்சார்ச்சனை. 12.04.2024 வெள்ளி அன்று ஸ்ரீ கோதண்டராமருக்கு பால் அபிஷேகம், லட்சார்ச்சனை, ஸ்ரீ சீதாராம திருக்கல்யாண உற்சவம்.

14.04.2024 ஞாயிறு, தமிழ் வருடப் பிறப்பு சிறப்பு அலங்கார தரிசனம், லட்சார்ச்சனை, பஞ்சாங்க படனம். 17.04.2024 புதன் ராமநவமி அன்று, ஐந்தாம் கால யாக சாலை பூர்த்தி, சிறப்பு திருமஞ்சனம், மஹா பூர்ணாஹுதி, த்ருஹப்ரீத்தி யாத்ராதானம், கடம் புறப்பாடு, கலசாபிஷேகம், சிறப்பு அலங்காரம், லட்சார்ச்சனை. 18.04.2024 வியாழன் அன்று லட்சார்ச்சனை பூர்த்தியுடன் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி புறப்பாடு நடை பெறுகிறது. உலகம் நன்மை பெறவேண்டி அருள்மிகு கோதண்டராம சுவாமிக்கு நடைபெற உள்ள லட்சார்ச்சனை சிறப்பு யாகங்களிலும், சந்தனக் காப்பு அலங்காரத்திலும், பால் அபிஷேகத்திலும்,  சீதாராம திருக்கல்யாணம் உற்சவத்திலும், பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு இறையருள் பெற்று
இன்புற்று வாழ அன்புடன் வேண்டுகிறோம்.

அனுஷா

Related posts

திருக்குறுங்குடி அழகிய நம்பி ராயர் பெருமாள் ஆலயம்

மோகத்தைக் கொன்றுவிடு!

திரிசங்கு சொர்க்கம் என்றால் என்ன?