சொத்து பிரச்சனை!: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சார்பு நீதிமன்ற வளாகத்தில் பெண் தீக்குளித்து தற்கொலை..!!

திருப்பூர்: சொத்து பிரச்சனை காரணமாக திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சார்பு நீதிமன்ற வளாகத்தில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள தெக்காலூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தம்மாள் (60). இவரது தந்தை ராமசாமி மற்றும் பாலசுப்பிரமணி, ஈஸ்வர மூர்த்தி என 2 சகோதரர்கள் உள்ளனர். இவர்களுடன் சொத்து தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கு தாராபுரம் உரிமையியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்த வாரம் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் கோர்ட்டுக்கு வந்த கோவிந்தம்மாள் வளாகத்தில் விஷம் குடித்துவிட்டு, பிறகு மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துக் கொண்டார்.

இதனால் கோர்ட் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கோவிந்தம்மாளின் சடலத்தை கைப்பற்றி தாராபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாகப்பிரிவினை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட காரணத்தால் மனமுடைந்து விரக்தியில் கோர்ட் வளாகத்தில் உள்ள விநாயகர் கோயில் முன்பு விஷயத்தை குடித்துவிட்டு கூடையில் வைத்திருந்த மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளித்து தற்கொலை கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் கோவிந்தம்மாளை காப்பாற்ற முடியும் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Related posts

புழலில் வாகனத்தில் சென்றபோது மாஞ்சா நூல் அறுத்து படுகாயம்

புனே நகரில் சொகுசு கார் வழக்கில் சிறுவனின் தாய் கைது!

திருவள்ளூர் அடுத்த காக்களூரில் பெயிண்ட் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழப்பு 4ஆக உயர்வு!!