110 தாசில்தார்களுக்கு துணை ஆட்சியர்களாக பதவி உயர்வு

சென்னை: உச்ச நீதிமன்றம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் பதவி உயர்வு அளிக்கும்போது பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டினை பின்பற்றி பதவி உயர்வு அளிக்கும்படி தீர்ப்பு வழங்கியது. உச்ச நீதிமன்றம் வழங்கிய ஆணையின்படி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் 2004ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை வெளியிடப்பட்ட துணை ஆட்சியர் பதவி உயர்வு பட்டியல்களில் பணிமூப்பில் உரிய திருத்தங்கள் செய்து அரசு ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அரசு ஆணைகளின்படி, தற்போது தாசில்தார்களாக இருக்கும் 110 பேருக்கு துணை ஆட்சியர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 2022ம் அண்டு வரையிலான துணை ஆட்சியர் பதவி உயர்வு பட்டியல் விரைவில் வெளியாகிறது.

Related posts

மேற்கு வங்கம் ரயில் விபத்து நேரிட்ட பகுதியில் ரயில்வே அமைச்சர் நேரில் ஆய்வு

பஸ் ஸ்டாப்பில் பெண் கொலை: வாலிபர் வெறிச்செயல்

வெப்ப அலை காரணமாக இண்டிகோ விமானம் புறப்படுவதில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தாமதம்