நான் மோடியின் ரசிகன். நிச்சயம் இந்தியா வருவேன் :பிரதமர் மோடியை சந்திந்த பிறகு எலான் மஸ்க் பேச்சு

புதுடெல்லி: நான் மோடியின் ரசிகன். நிச்சயம் இந்தியா வருவேன் என பிரதமர் மோடியை சந்திந்த பிறகு எலான் மஸ்க் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பை ஏற்று, பிரதமர் மோடி 4 நாள் சுற்றுப்பயணமாக நேற்று அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்றார். இதற்கு முன் 7 முறை மோடி அமெரிக்கா சென்றாலும், இதுவே அவரது முதல் அரசு முறை பயணமாகும். தனி விமானம் மூலம் நியூயார்க் சென்ற மோடி, இந்திய தூதரகம் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் வரவேற்றனர். இந்த நிலையில் அமெரிக்க பயணத்தில் பிரதமர் மோடி முதல் முறையாக இந்தியாவில் முதலீடு செய்ய விரும்பும் டெஸ்லா மற்றும் டிவிட்டர் நிறுவன உரிமையாளரும் உலகின் பெரும் பணக்காரருமான எலான் மஸ்க்கை சந்தித்து பேசினார். எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கிய பிறகு முதன்முறையாக மோடியை சந்தித்துள்ளார்.

அடுத்த ஆண்டு தாம் இந்தியா வர உள்ளதாகவும் மஸ்க் தெரிவித்துள்ளார். சந்திப்பு தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எலான் மஸ்க்,” நான் மோடியின் ரசிகன். அவரை சந்தித்தது மகிழ்ச்சியாக உள்ளது. எனக்கு அவரை மிகவும் பிடிக்கும். அவர் இந்தியாவிற்காக சரியானதை செய்ய விரும்புகிறார். அவர் எப்போதும் வெளிப்படையாக இருக்க விரும்புகிறார்.நிறுவனங்களுக்கு ஆதரவாக இருக்க விரும்புகிறார். இந்தியாவில் முதலீடு செய்யுமாறு பிரதமர் மோடி எனக்கு அழைப்பு விடுத்துள்ளார். அடுத்த ஆண்டு நான் இந்தியாவுக்கு செல்ல திட்டமிட்டு உள்ளேன். ஸ்டார்லிங்கை இந்தியாவுக்கு கொண்டுவர ஆவலுடன் காத்திருக்கிறேன். ஸ்டார்லிங்க் இணைப்பானது தொலைதூரம் மற்றும் கிராமப்புற பகுதிகளுக்கு நம்ப முடியாத அளவிற்கு உதவியாக இருக்கும் என நினைக்கிறேன்,’என்றார்.

Related posts

ஜூன்- 02: இன்று பெட்ரோல் ரூ.100.75, டீசல் ரூ.92.34 க்கு விற்பனை!.

இறுக்கமான முகத்தோடு சொந்த ஊர் வந்து சேர்ந்த இலைத்தலைவரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

சொல்லிட்டாங்க…