பிரதமர் மோடி பேச்சு 10 ஆண்டு பாஜ ஆட்சி வெறும் டிரைலர் தான்: அடுத்த 5 வருடம் என்னென்ன நடக்கப் போகிறது பாருங்கள்

மீரட்: ‘கடந்த 10 ஆண்டு பாஜ ஆட்சியில் வெறும் டிரைலரை மட்டும் தான் பார்த்துள்ளீர்கள். அடுத்த 5 ஆண்டில் என்னென்ன நடக்கப் போகிறது பாருங்கள்’ என உபி பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசி உள்ளார். மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, உத்தரப்பிரதேசத்தில் முதல் முறையாக மீரட்டில் நேற்று நடந்த பாஜ பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசியதாவது:
கடந்த 10 ஆண்டுகள் நாட்டின் வளர்ச்சியின் டிரைலரை மட்டும்தான் பார்த்துள்ளீர்கள்.

இனி அடுத்த 5 ஆண்டு காலம் நாட்டை இன்னும் எவ்வளவு உச்சத்திற்கு கொண்டு செல்லப் போகிறோம் பாருங்கள். 3ம் முறை ஆட்சியின் முதல் 100 நாட்களில் எடுக்க வேண்டிய முக்கிய முடிவுகளுக்கான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. நான் வறுமையில் வாழ்ந்தவன். அதனால் ஒவ்வொரு ஏழையின் துயரத்தையும், வலியையும், துன்பத்தையும் நன்கு புரிந்து கொள்ள முடியும். ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தது மட்டுமல்லாமல், அவர்களின் சுயமரியாதையையும் திரும்பக் கொடுத்துள்ளோம். இவ்வாறு பேசினார்.

Related posts

2018 தேர்தல் வேட்பு மனுவில் ரகசிய மகளின் பெயரை மறைத்த இம்ரான் கான்: உச்ச நீதிமன்றத்தில மேல்முறையீடு

காசா மக்களுக்கு உதவிகள் கிடைப்பதற்கு பகல் நேரத்தில் சண்டை நிறுத்தம்: இஸ்ரேல் அறிவிப்பு

காதலுக்கு வயது தடையில்லை 80 வயது தாத்தாவை காதலித்து மணந்த 23 வயது இளம்பெண்