விலையில் தொடர்ந்து மாற்றம் 2 நாளில் சவரனுக்கு ரூ.544 குறைந்தது

சென்னை: தங்கம் விலை தொடர்ந்து 2 நாட்களில் சவரனுக்கு ரூ.544 குறைந்துள்ளது. இந்த விலை குறைவு நகை வாங்குவோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து கடந்த மார்ச் 5ம் தேதி ஒரு சவரன் ரூ.46,200 என்ற புதிய உச்சத்தை தொட்டது. அதன் பிறகு தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறையாகும். அதனால், தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை. ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று தங்கம் மார்க்கெட் தொடங்கியது. அதில் தங்கம் விலை சற்று குறைந்தது. அதாவது, கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.5,570க்கும், சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.44,560க்கும் விற்கப்பட்டது. தொடர்ந்து 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.544 குறைந்துள்ளது. தங்கம் விலை குறைந்து வருவது நகை வாங்குவோரை சற்று மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Related posts

வரும் 10ம் தேதி அட்சயதிரிதியை கொண்டாட்டம் நகைக்கடைகளில் முன்பதிவு மும்முரம்: விலை குறைந்து வருவதால் நகை வாங்க பலர் ஆர்வம்

வட தமிழகத்தில் இன்றும் நாளையும் வெப்ப அலை வீசும்: 2 இடங்களில் 111 டிகிரி வெயில்

வெயிலின் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரிப்பு; சென்னைவாசிகள் வீடுகளுக்குள் முடங்கினர்: மாலையில் கடற்கரை, பூங்காக்களில் மக்கள் வெள்ளம்