அய்யா வைகுண்டரை பற்றிய சனாதன பேச்சு ஆளுநரை கண்டித்து குமரியில் போஸ்டர்

நாகர்கோவில்: ‘சனாதன தர்மத்தை காக்கவே அய்யா வைண்டர் தோன்றினார்’ என்று பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து குமரி மாவட்டத்தில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அய்யா வைகுண்டர் பிறந்த நாளில் சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, சனாதன தர்மத்திற்கு பாதிப்பு ஏற்பட்ட காலத்தில் சனாதன தர்மத்தைப் பாதுகாப்பதற்காக அய்யா வைகுண்டர் தோன்றினார் என்று பேசினார்.

அய்யா வைகுண்டரை சனாதனவாதி என்று ஆளுநர் கூறிய நிலையில் பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.  இந்நிலையில், குமரி, நாகர்கோவில் உட்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஆளுநரை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த போஸ்டரில், ‘சாதிய அடிமைத்தனத்திற்கு எதிராக வலுவான போராட்டத்தை நடத்திய அய்யா வைகுண்டரை சனாதனவாதி என்று இழிவுப்படுத்திய ஆளுநர் ஆர்.என்.ரவியை வன்மையாக கண்டிக்கிறோம். இவண் அய்யா வைகுண்டர் பாரம்பரிய பாதுகாப்பு இயக்கம், கன்னியாகுமரி,’ என்று கூறப்பட்டுள்ளது.

 

Related posts

மூன்றாவது நாளாக ஏற்றத்தில் தங்கம் விலை: சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.54,200க்கு விற்பனை

தமிழ்நாடு, புதுச்சேரி காரைக்காலில் ஓரிரு இடங்களில் ஜூன் 2-ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

வந்தவாசி அடுத்த பொன்னூர் கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம்..!!