போர்ஷே டென்னிஸ் கிராண்ட் பிரீபிளிஸ்கோவா முன்னேற்றம்

ஸ்டுட்கார்ட்: ஜெர்மனியில் நடைபெறும் போர்ஷே டென்னிஸ் கிராண்ட் பிரீ தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் விளையாட, செக் குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா தகுதி பெற்றுள்ளார். கிரீஸ் நட்சத்திரம் மரியா சாக்கரியுடன் (27 வயது, 9வது ரேங்க்) மோதிய பிளிஸ்கோவா (31 வயது, 17வது ரேங்க்) அதிரடியாக புள்ளிகளைக் குவித்து 6-2, 6-3 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தினார். இப்போட்டி 1 மணி, 11 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. மற்றொரு போட்டியில அமெரிக்காவின் கோகோ காஃப் 6-2, 4-6, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் ரஷ்யாவின் வெரோனிகா குதெர்மதோவாவை வீழ்த்தினார். விறுவிறுப்பான இப்போட்டி 2 மணி, 45 நிமிடத்துக்கு நீடித்தது.

Related posts

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை வெளியாகின்றன!

சென்னையில் தனக்குத் தானே பிரசவம் பார்த்தபோது, குழந்தையை வெட்டிக் கொன்ற செவிலியர் சிறையில் அடைப்பு!

ரஷ்ய போலீசார் தேடப்படுவோர் பட்டியலில் உக்ரைன் அதிபர்!