பாண்டியா பாவம்…தேற்றுகிறார் போலார்டு

புதிய கேப்டன் ஹர்திக் பாண்டியா தலைமையில் மும்பை 6 ஆட்டங்களில் 2 வெற்றி, 4 தோல்வியுடன் 8வது இடத்தில் உள்ளது. ஹர்திக் மீதான விமர்சனங்கள் அதிகரித்துள்ள நிலையில், மும்பை அணியின் பயிற்சியாளர்களில் ஒருவரும், முன்னாள் வீரருமான கைரன் போலார்டு, ‘கிரிக்கெட்டில் உங்களுக்கு நல்ல நாட்களும் இருக்கும், கெட்ட நாட்களுக்கும் இருக்கும். ஹர்திக் கடுமையாக உழைக்கிறார்.

அதற்கு பலன் கிடைக்கும் என்று நம்புகிறேன். வெற்றிகள் குவியும்போது எல்லோரும் அவரது புகழ்பாடுவதை பின்னால் திரும்பி பார்ப்பேன். எனவே, தனிநபரை குறை சொல்வது சரியல்ல. கிரிக்கெட் குழு விளையாட்டு. இந்தியா உருவாக்கிய மிகச்சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவரின் முழு திறமையையும் வெளிக்கொண்டு வர நாங்கள் அதிகமாக முயற்சிக்கிறோம். அவர் விரைவில் தனது சிறந்த நிலைக்கு திரும்புவார்’ என்று கூறியுள்ளார்.

 

Related posts

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் இன்று தொடக்கம்

தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்

இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்