பொங்கல் பண்டிகையை ஒட்டி உள்நாட்டு விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்வு: பயணிகள் அதிர்ச்சி

சென்னை: பொங்கல் பண்டிகையை ஒட்டி தொடர் விடுமுறை காரணாமாக உள்நாட்டு கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளதால் பயணிகள் அதிச்சியடைந்துள்ளனர். சென்னையில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை செல்லும் விமானங்களில் டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. வழக்கமான கட்டணத்தை விட 3 மடங்கு அதிகரித்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சிகுள்ளாகினர். சென்னை- மதுரை இடையே விமான கட்டணம் 5 மடங்கு அதிகரித்துள்ளது.

சென்னை- மதுரைக்கு வழக்கமாக ரூ.3,367 என விமான கட்டணம் இருந்த நிலையில் தற்போது ரூ.17,262 ஆக உயர்ந்துள்ளது. சென்னை- கோவைக்கு வழக்கமாக ரூ.3,315 என விமான கட்டணம் இருந்த நிலையில் தற்போது ரூ.14,689 ஆக உயர்ந்துள்ளது. சென்னை- சேலம் செல்ல ரூ.2.290 என விமான கட்டணம் இருந்த நிலையில் தற்போது ரூ.11,329 ஆக அதிகரிப்பு. சென்னை- திருச்சிக்கு வழக்கமாக ரூ.2.264 என விமான கட்டணம் இருந்த நிலையில் தற்போது ரூ.11,369 ஆக உயர்ந்துள்ளது.

Related posts

தேனியில் 25 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் அமரேசன் என்பவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

வங்கி அதிகாரிகளின் விவரங்களை வழங்கக் கோரிய செந்தில் பாலாஜியின் வழக்கில் ஜூன் 14ம் தேதி தீர்ப்பு வழங்குகிறது முதன்மை அமர்வு நீதிமன்றம்

தமிழக அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்திட செய்தி மக்கள் தொடர்புத் துறையில் வாட்ஸ்அப் சேனல் துவக்கம்