‘தேர்தல் நாள் தேசத்தின் கவுரவம்’ சேலையில் வாக்குப்பதிவு விழிப்புணர்வு: கலெக்டர் அசத்தல்

 

சாம்ராஜ்நகர்: மக்களவை தேர்தலில் வாக்கு பதிவு அதிகரிக்க பல வழிகளில் தேர்தல் ஆணையம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக கர்நாடகாவில் 14 தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது. சாம்ராஜ்நகர் மாவட்ட கலெக்டரும் தேர்தல் அதிகாரியுமான ஷில்பாநாக், மாவட்டத்தில் பெரும்பான்மையான வாக்குச்சாவடிகளை மாதிரி வாக்கு சாவடிகளாக அமைத்திருந்தார். கன்னட கலை, பண்பாடு, கலாச்சாரம், நாட்டுப்புறக்கலை, ஆதிவாசிகளின் வாழ்வியில் உள்ளிட்ட கலாச்சாரங்களில் வாக்கு சாவடி அமைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வாக்கு பதிவு நாளான நேற்று வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் கலெக்டர் ஷில்பாநாக், மாவட்ட துணை இயக்குனர் லட்சுமி மற்றும் மாவட்ட உணவு வழங்கல் துறை இணை இயக்குனர் சவிதா ஆகியோர் தாங்கள் அணிந்திருந்த சேலையில் ‘ தேர்தல் நாள் தேசத்தின் கவுரவம்’ என்ற வாசகம் பதித்திருந்தனர். இதை வாக்குச்சாவடி அருகில் காட்டி வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Related posts

மிசோரம் மாநிலத்தின் அய்ஸால் பகுதியில், ரெமல் புயல் காரணமாக பல இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு!

மோடியின் தியான நிகழ்ச்சிக்கு தேர்தல் ஆணையம் அனுமதி தரக்கூடாது: செல்வப்பெருந்தகை பேட்டி

சேவல் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி: பிளக்ஸ் போர்டால் பரபரப்பு