23ம் தேதி அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆலோசனை: தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதாசாகு தகவல்

சென்னை: 23ம் தேதி அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தப்படும் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதாசாகு தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் வாக்களர்கள் எவ்வாறு வாக்கு பதிவு செய்வது தொடர்பாக வாக்காளர் கையேடு தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதாசாகு வெளியிட்டார். பின்னர் நிருபர்களிடம் சத்ய பிரதாசாகு கூறியதாவது : வாக்காளர்கள் எப்படி வாக்கு பதிவு செய்ய வேண்டும் என வீடு வீடாக கையேடு வழங்கப்பட உள்ளோம். மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. நேற்று முதல் மக்களவை தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் தொடங்கி நடைபெறுகிறது.

நடைபெற உள்ள மக்களவை தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மார்ச் 23ம் தேதி பகல் 12 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடத்தப்பட உள்ளது. தேர்தல் பணிகள், நடத்தை விதிமுறைகள் அமல் உள்ளிட்டவை குறித்து அரசியல் கட்சிகளின் கருத்துகளை கேட்க தேர்தல் ஆணையம் முடிவு செய்யப்பட்டள்ளது. தமிழ்நாட்டில் அரசு மாதந்தோறும் ரூ.1000 வழங்குவதற்கு எந்த தடையும் இல்லை. அதேபோல் இ-சேவை மையம் மூலமாக வழங்கப்படும் சாதி, பிறப்பு, இறப்பு சான்றுகள் பெற தடையில்லை. பிரதமரின் பேரணிக்கு பள்ளிக் குழந்தைகள் அழைத்துச் சென்றது தொடர்பாக விசாரணை நடத்தப்பட உள்ளது. அதற்காக பாஜக, காவல்துறை, பள்ளிக் கல்வித்துறை, பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார்.

Related posts

அவதூறு வழக்கில் ராகுல்காந்தி 7ம் தேதி ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

சீட் கொடுக்காததால் விரக்தி; நான் பாஜகவில் தான் இருக்கிறேன்: நடிகையான மாஜி எம்பி பேட்டி

இந்தியாவுக்கே சவால்விடும் முதல்வராக மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகின்றார்: கி.வீரமணி பேச்சு