நிமோனியா பாதிப்பு இல்லை; போப் பிரான்சிஸ்க்கு தொடர் மருத்துவ சிகிச்சை

வாடிகன் சிட்டி: போப் பிரான்சிஸ்க்கு நிமோனியா அல்லது காய்ச்சல் ஆகிய பாதிப்புகள் இல்லை என்று வாடிகன் செய்தி தொடர்பு இயக்குனர் மேட்டோ புரூனி நேற்று தெரிவித்தார். போப் உடலில் சற்று வீக்கம் ஏற்பட்டுள்ளதால் செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் வாராந்திர ஆசிகளை அளிக்க முடியவில்ல. அதற்கு பதிலாக வாட்டிகன் ஓட்டல் வழிபாட்டு மாடத்திலிருந்து அனைவருக்கும் ஆசி வழங்கியதாக போப் தெரிவித்தார்.

அவரது உடல் நிலை குறித்து மேட்டோ புரூனி வெளியிட்ட அறிக்கையில், ‘தற்போது போப் உடல்நிலை திடமாகவும், நலமாகவும் உள்ளது. அவருக்கு ஸ்கேன் செய்யப்பட்டதில் நிமோனியா காய்ச்சல் இல்லை என்றும், நுரையீரல் இயக்கம் நன்றாக இருப்பதாகவும் தெரிந்தது. முற்றிலும் நலம் பெறும் வகையில் அவர் வரும் நாட்களில் மேற்கொள்ளவிருந்த சந்திப்புகளை தள்ளி வைத்துள்ளார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க டெல்லி நீதிமன்றம் மறுப்பு!!

ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற சந்திரபாபு நாயுடுவிற்கு ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

அதிமுகவின் தலைமை ஏற்க வேண்டும் என சசிகலாவுக்கு ஆதரவாக தென்காசியில் சுவரொட்டி..!!