ஜூனில் பிளஸ்2 துணைத்தேர்வு

சென்னை: பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்தவர்கள், தேர்வுக்கு வராதவர்களுக்காக ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் துணைத் தேர்வு நடத்த தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. இதை எழுத விரும்புவோர் தேர்வுத்துறையின் இணைய தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். பள்ளிகள் மூலம் பிளஸ் 2 தேர்வு எழுதி தேர்ச்சி பெறாதவர்கள், தேர்வுக்கு வராதவர்கள் இம்மாதம் 16ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை அதே பள்ளிக்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.

தனித் தேர்வர்கள், 16ம் தேதி முதல் அந்தந்த கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.  கல்வி மாவட்ட வாரியாக சேவை மையங்களின் விவரம், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, தனித் தேர்வர்களின் தகுதி குறித்து www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் தெரிந்து ெகாள்ளலாம். ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.50 கட்டணமும், இதர கட்டணம் ரூ.35ம் செலுத்த வேண்டும். ஆன்லைன் பதிவுக் கட்டணம் ரூ.70 செலுத்த வேண்டும்.

பிளஸ் 2 தேர்வை முதன்முறையாக எழுதுபவர்கள் தேர்வுக் கட்டணம் ரூ.150, இதரக் கட்டணம் ரூ.35, ஆன்லைன் பதிவுக் கட்டணம் ரூ.70 செலுத்த வேண்டும். சிறப்பு அனுமதி திட்டம்: குறிப்பிட்ட தேதியில் விண்ணப்பிக்கத் தவறும் மாணவர்கள் உரிய கட்டணத்துடன் ஜூன் 3, 4ம் தேதிகளில் ஆன்லைனில் சிறப்பு அனுமதி திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். சிறப்பு அனுமதிக் கட்டணம் ரூ.1000 செலுத்த வேண்டும்.

Related posts

மின் கம்பி அறுந்து 7 ரயில்கள் நடுவழியில் நிறுத்தம்

அமித்ஷா நாளை மதுரை வருகை

தங்கையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதை கண்டித்ததால் பள்ளி மாணவன் கழுத்தறுத்து கொலை: 17 வயது சிறுவன் வெறிச்செயல்