தீராத வயிற்று வலியால் பிளம்பர் தூக்கிட்டு தற்கொலை

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே தீராத வயிற்றுவலி காரணமாக பிளம்பர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாமல்லபுரம் அருகே உள்ள பட்டிப்புலம் கிராமத்தை சேர்ந்தவர் சாமிக்கண்ணு மகன் முருகன் (39). இவருக்கு திருமணமாகி மனைவி மட்டும் உள்ளார். இவர், மாமல்லபுரம் சுற்று வட்டார பகுதிகளில் பிளம்பர் வேலை செய்து வந்தார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக தீராத வயிற்று வலி காரணமாக முருகன் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனால், மனமுடைந்து நேற்று காலை மாமல்லபுரம் அடுத்த புலிக்குகைக்கு அருகில் இருந்த வேப்ப மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, தகவலறிந்த மாமல்லபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட ரயில் விபத்து தொடர்பாக உதவி எண்களை அறிவித்துள்ளது ரயில்வே துறை

சென்னை அண்ணா நகரில் அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்டு சார் பதிவாளர் தற்கொலை முயற்சி

மன்னார்குடி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு