யாத்திரைக்கு தற்காலிக இடைவெளி ராகுல்காந்தி இங்கிலாந்து பயணம்: கேம்பிரிட்ஜ் பல்கலையில் உரை

புதுடெல்லி: இந்திய ஒற்றுமை நீதி யாத்திரைக்கு மத்தியில் ராகுல்காந்தி வரும் 26ம் தேதி இங்கிலாந்தில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். லோக்சபா தேர்தல் வரவுள்ள நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, வடமாநிலங்களில் யாத்திரை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் வரும் 26ம் தேதி முதல் மார்ச் 1ம் தேதி வரை யாத்திரைக்கு இடைவேளை அளிக்கப்பட்டுள்ளது.

இடைப்பட்ட இந்த நாட்களில் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் இரண்டு சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், ‘கான்பூர் யாத்திரையை ெதாடர்ந்து நாளையும், நாளை மறுநாளும் ஓய்வு நாட்களாக இருக்கும். அதன்பின் வரும் 24ம் தேதி உத்தரபிரதேசத்தின் மொராதாபாத்தில் இருந்து மீண்டும் யாத்திரை தொடங்கும்.

வரும் 26ம் தேதி முதல் மார்ச் 1ம் தேதி வரையிலான நாட்களில் ராகுல் காந்தி கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடக்கும் நிகழ்வுகளில் பங்கேற்கிறார். பின்னர் அவர் நாடு திரும்பியதும் மார்ச் 2ம் தேதி முதல் ராஜஸ்தானின் தோல்பூரில் இருந்து மீண்டும் யாத்திரை தொடங்கும். மார்ச் 5ம் தேதி மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜயினியில் உள்ள மகாகாலேஷ்வர் கோயிலில் சாமி தரிசனம் செய்வார்’ என்று கூறினார்.

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாதது மேலிடத்தின் உத்தரவு: ப.சிதம்பரம் விமர்சனம்

டி20 உலகக்கோப்பை லீக்போட்டி: நமீபியாவை 41 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து

உத்தராகண்ட் மாநிலம் பத்ரிநாத் நெடுஞ்சாலையில் உள்ள ஆற்றில் வேன் கவிழ்ந்த விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்வு