போட்டோ எடுக்கக்கூடாதா? நான் ஓட்டே போட மாட்டேன்… வீட்டிற்கு திரும்பிய அதிமுக முன்னாள் எம்பி

திருச்சி: திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆல்பர்ட் மார்சல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் நேற்று காலை வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்துக்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுக்க அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆவேசம் அடைந்த முன்னாள் எம்.பி ப.குமார் நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பி யாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன் என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்திலிருந்து வெளியேறினார். பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய பின்னர் மீண்டும் மதியம் 12 மணிக்கு வாக்குசாவடியில் வந்து தன்னடைய வாக்கை பதிவுசெய்தார். இதனால் வாக்குபதிவு மையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related posts

என் மகனை உங்களிடம் ஒப்படைக்கிறேன்.. ரேபரேலியில் எனக்கு அளித்த இடத்தை ராகுலுக்கு கொடுங்கள்: சோனியா காந்தி பேச்சு

கனமழை எச்சரிக்கை: நெல்லை, குமரி, நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் மீட்பு படை தயார்!!

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்