இந்து மகா சபா நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

உளுந்தூர்பேட்டை: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை நகராட்சி கேசவன் நகரில் வசித்து வருபவர் செந்தில். இவர் அகில பாரத இந்து மகா சபாவின் மாநில பொதுச்செயலாளராக உள்ளார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் தனது வீட்டில் குடும்பத்தோடு படுத்து தூங்கியுள்ளார். நள்ளிரவில் அவரது வீட்டின் முன் பகுதியில் பயங்கர சத்தம் கேட்டு, எழுந்து வந்து பார்த்தபோது வீட்டில் முன் உள்ள வராண்டா பகுதியில் தீப்பிடித்து எரிந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று சிசிடிவி காட்சி பதிவுகளை பார்த்த போது மர்ம நபர் ஒருவர் கையில் பெட்ரோல் குண்டு எடுத்து வந்து வீட்டின் முன்பக்க கதவு அருகில் வீசியது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related posts

வரும் 20ம் தேதி சென்னை வரும் பிரதமர் மோடியின் பயணம் திடீர் ரத்து: சபாநாயகர் தேர்தலில் சிக்கல் நீடிப்பதால் ஒத்திவைப்பு என தகவல்

மக்களவையில் துணை சபாநாயகர் பதவி தராவிட்டால் சபாநாயகர் பதவிக்கு இந்தியா கூட்டணி போட்டி: மோடி அரசுக்கு நெருக்கடி கொடுக்க எதிர்க்கட்சிகள் அதிரடி முடிவு

லஞ்சம் வாங்கி கொண்டு வினாத்தாள் கசிவு, விடைத்தாளில் திருத்தம் நீட் தேர்வில் முறைகேடு நடந்தது உண்மை