பெட்ரோல் நிலைய கழிவறைக்குள் காதல் ஜோடி லூட்டி அரைகுறை ஆடையுடன் சிக்கினர்: குமரியில் பரபரப்பு

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் இளம் ஜோடி ஒன்று கழிவறைக்குள் லூட்டி அடித்தபோது மாட்டிக்கொண்ட சம்பவம் அனைவரையும் அதிரவைத்து உள்ளது. நேற்று மாலை மார்த்தாண்டத்தில் இருந்து கருங்கல் செல்லும் சாலையில் 23 வயது மதிக்கத்தக்க வாலிபரும், இளம்பெண்ணும் கட்டியணைத்தபடி ஒரே பைக்கில் சென்று கொண்டு இருந்தனர்.

பஸ் நிலையத்தை தாண்டி பெட்ரோல் பங்க் அருகே வந்தனர். அப்போது பைக்கில் இருந்த இளம்பெண் கழிவறைக்கு செல்ல வேண்டும் என்று கூறி உள்ளார். உடனே வாலிபரும் பைக்கை நிறுத்தி இருக்கிறார். பின்னர் இளம்பெண் அங்கிருந்த பெட்ரோல் பங்க் பெண் ஊழியரிடம் நான் இந்த கழிவறையை பயன்படுத்திக்கொள்கிறேன் என்று கூறிவிட்டு சென்று உள்ளார்.

வாலிபர் கழிவறைக்கு வெளியே நின்று கொண்டு இருந்தார். அப்போது உள்ளே சென்ற இளம்பெண் திடீரென கதவை லேசாக திறந்து, காதலனுக்கு கண்களாலே ஜாடை காட்டி உள்ளே அழைத்து உள்ளார். வாலிபரோ சற்றும் யோசிக்காமல் அவசரம் அவசரமாக மின்னல் வேகத்தில் கழிவறைக்குள் புகுந்துவிட்டார். இதைக்கண்ட பெட்ேரால் பங்க் பெண் ஊழியர் அதிர்ச்சி அடைந்தார்.

இப்படியாக சுமார் 10 நிமிடம்… 15 நிமிடம் ஆனது… ஆனால் கழிவறைக்குள் சென்ற இளசுகள் திரும்பி வந்தபாடு இல்லை. இதனால் விபரீதத்தை உணர்ந்த பெட்ரோல் பங்க் பெண் ஊழியர் உடனே கூச்சலிட்டு உள்ளார். இதையடுத்து சக ஊழியர்கள் சேர்ந்து கழிவறைக்கு அருகே சென்று கதவை தட்டினர். இதனால் அதிர்ச்சியடைந்த இளம்ஜோடி வெளியே வர மாட்டோம் என்று அடம் பிடித்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் வெளியில் இருந்து வந்த சத்தம் அதிகமானதால் விபரீதத்தை உணர்ந்த ஜோடி வேர்க்க விறுவிறுக்க அரைகுறை ஆடைகளுடன் கழிவறையை விட்டு ஒரு வழியாக வெளியே வந்தனர். உடனே அங்கிருந்தவர்கள் 2 பேரையும் சுற்றி வளைத்து விட்டனர். இது குறித்து உடனடியாக போலீசுக்கும் தகவல் அளிக்கப்பட்டது.

இதையடுத்து விபரீதத்தை உணர்ந்த காதலர்கள் 2 பேரும் தாங்கள் வந்த பைக்கை அப்படியே போட்டுவிட்டு அங்கிருந்தவர்களின் பிடியில் இருந்து தப்பி நைசாக ஓட்டம் பிடித்து விட்டனர். இதற்கிடையே போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். 2 பேரும் தப்பி ஓடிவிட்டதால் பைக்கை மட்டும் பறிமுதல் செய்து கொண்டு மார்த்தாண்டம் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

போலீசாரின் தீவிர விசாரணையில் பைக் கேரள பதிவெண் கொண்டது என்பதும், இளசுகள் 2 பேரும் கேரளாவில் இருந்து வந்ததும் தெரியவந்து உள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related posts

காதல் விவகாரத்தில் கத்திக்குத்து முன்னாள் காதலன் பரிதாப பலி: இந்நாள் காதலன் வெறிச்செயல்

மும்பை வடமேற்கு தொகுதியில் EVM-ல் முறைகேடு நடந்ததாக எழுந்துள்ள புகார் தொடர்பாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்

ரூ.5 லட்சத்திற்கு விற்கப்பட்ட 12 வயது சிறுமியுடன் 72 வயது முதியவருக்கு திருமணம்: தடுத்து நிறுத்திய பாகிஸ்தான் போலீஸ்