பொன்னேரி அருகே வீட்டுமனை பட்டா வழங்க கோரி நரிக்குறவர்கள் மனு

பொன்னேரி:திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த அழிஞ்வாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பண்டி காவணூர் கிராமத்தில், கடந்த 13 ஆண்டுகளாக கிராம நத்தம் இடத்தில் 16 குடிசைகள் அமைத்து நரிக்குறவர் இன மக்கள் வசித்து வருகின்றனர். வீட்டுமனை பட்டா கேட்டும், அடிப்படை வசதிகள் செய்ய கோரியும், இவர்கள் திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை மூன்று மாவட்ட கலெக்டர்களிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. நேற்று முன்தினம் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். கலெக்டர், பொன்னேரி சப்- கலெக்டரிடம் செல்லுங்கள் வீட்டுமனை பட்டா வழங்கப்படும் என்று கூறினார்.

அதனை தொடர்ந்து நேற்று பொன்னேரி சப்- கலெக்டர் அலுவலகத்தில், சப் கலெக்டர் ஐஸ்வர்யா ராமநாதனை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அவர் உடனடியாக வருவாய் துறை ஆய்வாளர்களை அழைத்து, நாளை நரிக்குறவர் கிராம மக்கள் வசிக்கும் பகுதிக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்து இலவச வீட்டு மனை பட்டா வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என தெரிவித்தார். இதனை தொடர்ந்து நரிக்குறவர் இன மக்கள் கலந்து சென்றனர்.

Related posts

வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக கைது வாரண்ட்!

பெங்களூரு-சென்னை அணிகளுக்கு இடையேயான போட்டி மழையால் நிறுத்தம்!

தென்காசி மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாட்டில் உள்ள பழைய குற்றாலம், மெயின் குற்றாலம், ஐந்தருவிகளை வனத்துறை வசம் ஒப்படைக்க முடிவு