பெருமுக்கல் சஞ்சீவி மலை மேல் அமைந்துள்ள ஸ்ரீமுக்தியாஜல ஈஸ்வரர் கோயிலில் 1008 நெய் தீபம் ஏற்றி வழிபாடு

திண்டிவனம் : திண்டிவனம் அடுத்த பெருமுக்கல் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமுக்தியாஜல ஈஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு மகாதீபம் ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.திண்டிவனம்-மரக்காணம் சாலை, பெருமுக்கல் கிராமத்தில் சஞ்சீவி மலை மேல் பிரசித்தி பெற்ற ஸ்ரீமுக்தியாஜல ஈஸ்வரன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில், ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீப திருவிழாவையொட்டி நெய் தீபம் ஏற்றப்படுவது வழக்கம்.

நேற்று கார்த்திகை தீப பெருவிழாவை முன்னிட்டு, மாலை 5 மணிக்கு, முக்தியாஜல ஈஸ்வரருக்கு பால், பன்னீர், தயிர், மோர், நெய், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 21 வகையான வாசனை பொருட்களால் அபிஷேகம் நடந்தது. இதன் தொடர்ச்சியாக முக்தியாஜல ஈஸ்வரர் விபூதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின், நந்தியின் முன்பு பரணி தீபம் ஏற்றப்பட்டது.
மாலை 6 மணிக்கு, சிவன் பாடல்கள் முழங்க, 1008 லிட்டர் நெய் கொண்டு 7 அடி உயர கொப்பரையில் கார்த்திகை மகா தீபம் ஏற்றி வைக்கப்பட்டது.

இந்த மகா தீபத்தை காண ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மலை மீது ஏறி சாமி தரிசனம் செய்வது வழக்கம். இதேபோல் இந்த ஆண்டும் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை பெருமுக்கல் கிராம பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காத வகையில் பிரம்மதேசம் காவல் நிலைய போலீசார் 30க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Related posts

திருப்பத்தூர் அருகே பள்ளி வளாகத்தில் உலா வந்த சிறுத்தை பல மணி நேர போராட்டத்திற்குப்பின் பிடிபட்டது: வனத்துறை தகவல்

அமைதியைச் சீர்குலைக்கும் வகையில்பேசியதாக பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் உபா சட்டத்தில் வழக்கு

திருப்பத்தூரில் பல மணி நேர போராட்டத்திற்கு பின் பிடிபட்டது சிறுத்தை