பைக்குகள் மோதல் தாய், மகன் உட்பட 3 பேர் பரிதாப பலி

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே கட்டங்குடியை சேர்ந்தவர் சங்கரி(45). இவர் மகன் ஆனந்தராஜுடன்(25) பைக்கில் நேற்று விருதுநகர் சென்று கொண்டிருந்தார்.
116 காலனி அருகில் சென்றபோது எதிரே வந்த பைக் நேருக்கு நேர் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சங்கரி, ஆனந்தராஜ், எதிரே பைக்கில் வந்த விருதுநகர் அருகே பாலவநத்தத்தை சேர்ந்த ரஞ்சித்குமார்(18) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ரஞ்சித்குமாருடன் வந்த அழகுமணி(18) படுகாயமடைந்தார். இதுகுறித்து சூலக்கரை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல்காந்தி: இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டி

நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஒரு வாரம் இங்கிலாந்தில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய 25 மாணவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

பக்தர்கள் அளிக்கும் காணிக்கை மோசடி தொடர்பாக பேசியதால் முன்னாள் கோயில் அறங்காவலரை வழிமறித்து கத்தி முனையில் கொலை மிரட்டல்: அர்ச்சகர் காளிதாஸ் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு