தேர்தல் அதிகாரியை தாக்கியதாக வழக்கு மு.க.அழகிரி உள்ளிட்ட 17 பேர் விடுதலை

மதுரை: கடந்த 2011 ஏப்ரலில் நடந்த சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது, மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள வெள்ளலூர் அம்பலக்காரன்பட்டி வல்லடிகாரர் சுவாமி கோயிலுக்குள், வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக புகார் எழுந்தது. அப்போதைய மேலூர் தேர்தல் அதிகாரியும் தாசில்தாருமான காளிமுத்து மற்றும் தேர்தல் அலுவலர்கள், வீடியோ கேமராமேனுடன் அங்கு சென்று வீடியோ எடுத்தனர். அப்போது, தாசில்தார் காளிமுத்துவை தாக்கியதாக கீழவளவு காவல்நிலையத்தில், அவர் புகார் அளித்திருந்தார்.

இது தொடர்பாக முன்னாள் ஒன்றிய அமைச்சர் மு.க.அழகிரி மற்றும் முன்னாள் துணைமேயர் பி.எம்.மன்னன், ரகுபதி, திருஞானம் உள்ளிட்ட 21 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு மதுரை முதலாவது நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்குப்பதிவு செய்யப்பட்ட 21 பேரில் 4 பேர் இறந்துவிட்டனர். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில், முன்னாள் ஒன்றிய அமைச்சர் மு.க.அழகிரி, முன்னாள் துணைமேயர் பிஎம் மன்னன் உள்ளிட்ட 17 பேர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர். அப்போது மு.க.அழகிரி உள்ளிட்ட 17 பேரையும் விடுதலை செய்து நீதிபதி முத்துலட்சுமி உத்தரவிட்டார்.

Related posts

பொய்கை மாட்டுச்சந்தையில் ₹90 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனை

மக்களவை தேர்தலில் 200 தொகுதிகளில் கூட பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறாது: மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்

விருதுநகர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனை வளாகத்தில் 2பேருக்கு அரிவாள் வெட்டு..!!