நாடாளுமன்ற தேர்தல்; தமிழகத்தில் 1.90 கோடி பேர் வாக்களிக்கவில்லை: அதிர்ச்சி தகவல் வெளியானதால் பரபரப்பு

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 1.90 கோடி பேர் வாக்களிக்கவில்லை என்ற பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிக்கான தேர்தல் ஓரே கட்டமாக நேற்று நடந்தது. இத்தேர்தலில் 6 கோடியே 23 லட்சத்து 33 ஆயிரத்து 925 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். ஆனால், நேற்று நடைபெற்ற தேர்தலில் வெறும் 69.46 சதவீதம் பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். அதாவது, 4 கோடியே 32 லட்சத்து 97 ஆயிரத்து 144 பேர் தான் வாக்களித்துள்ளனர். 30.54 சதவீதம் பேர் வாக்களிக்கவில்லை.

அதாவது 1 கோடியே 90 லட்சத்து 36 ஆயிரத்து 781 பேர் வாக்களிக்கவில்லை. இதே போல வடசென்னை தொகுதியில் 14 லட்சத்து 96 ஆயிரத்து 224 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். ஆனால், வெறும் 60.13 சதவீதம் பேர் தான் வாக்களித்துள்ளனர். அதாவது. 8 லட்சத்து 99 ஆயிரத்து 679 பேர் வாக்களித்துள்ளனர். 5 லட்சத்து 96 ஆயிரத்து 545 பேர் வாக்களிக்க வரவில்லை.

தென்சென்னை தொகுதியில் 20 லட்சத்து 23 ஆயிரத்து 133 வாக்காளர்கள் உள்ளனர். ஆனால், 54.27 சதவீதம் பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். அதாவது, 10 லட்சத்து 97 ஆயிரத்து 954 பேர் வாக்களித்துள்ளனர். 9 லட்சத்து 25 ஆயிரத்து 179 பேர் வாக்களிக்கவில்லை. இதே போல மத்திய சென்னை தொகுதியில் 13 லட்சத்து 50 ஆயிரத்து 161 வாக்காளர்கள் உள்ளனர்.

இதில் 53.91 சதவீதம் பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். அதாவது, 7 லட்சத்து 27 ஆயிரத்து 871 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். 6 லட்சத்து 22 ஆயிரத்து 290 பேர் வாக்களிக்கவில்லை. இந்த அளவுக்கு மக்கள் வாக்களிக்காமல் இருந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர் விடுமுறை மற்றும் கடும் வெயிலால் மக்கள் வாக்களிக்க வரவில்லை என்று கூறப்படுகிறது.

Related posts

பூரன் – ராகுல் அதிரடி ஆட்டம் மும்பையை வீழ்த்தியது லக்னோ

பெண் எம்.பி தாக்கப்பட்ட விவகாரம் கெஜ்ரிவால் வீட்டில் போலீஸ் விசாரணை: பொய் புகார்: வீடியோ ஆதாரம் வெளியிட்டது ஆம்ஆத்மி

சட்டத்தை தவறாக பயன்படுத்தும் அமலாக்கத்துறை கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு