நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு… மக்களவையில் 5 எம்பிக்கள், மாநிலங்களவையில் எம்பி டெரிக் ஓ பிரையன் சஸ்பெண்ட்

புதுடெல்லி : ஜோதிமணி உட்பட காங்கிரஸ் எம்.பி.க்கள் 5பேரை மக்களவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.நாடாளுமன்றத்தில் அத்துமீறி இளைஞர்கள் 2 பேர் நுழைந்து முழக்க மிட்டனர். மேலும், வண்ண குண்டுகளையும் வீசினர். இதேபோல் நாடாளுமன்றத்தின் வெளிப்பகுதியில் பெண் உள்பட 2 பேரும் கோஷமிட்டனர். இதனால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு வழக்கம்போல் பலத்த பாதுகாப்புடன் நாடாளுமன்றத்தின் 2 அவைகளும் கூடியது. அப்போது பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து உடனடியாக விவாதிக்க வேண்டும் என்றும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து முழக்கமிட்டனர். இதனால் கூச்சல் குழப்பம் நிலவியது. இதையடுத்து மக்களவை பிற்பகல் 2 மணி வரைஒத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து மக்களவை 2 மணிக்கு பிறகு மீண்டும் கூடியது. அப்போதும் எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து முழக்கமிட்டனர். இதனால் ஜோதிமணி உட்பட காங்கிரஸ் எம்.பி.க்கள் 5 பேரை மக்களவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ரம்யா ஹரிதாஸ், டி.என்.பிரதாபன், ஹிபி இடன் ஆகியோர் மக்களவையில் இருந்து நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் ஓம்பிர்லா உத்தரவிட்டார். இதே போல் மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரையன், அவையின் மைய பகுதிக்கு வந்து தொடர்ந்து முழக்கமிட்டார். அவரை நடப்பு குளிர்கால கூட்டத்தொடர் முழுவதிலும் இருந்து சஸ்பெண்ட் செய்து துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் உத்தரவிட்டார். எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்றம் முடங்கியது.

Related posts

வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல்காந்தி: இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டி

நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஒரு வாரம் இங்கிலாந்தில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய 25 மாணவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

பக்தர்கள் அளிக்கும் காணிக்கை மோசடி தொடர்பாக பேசியதால் முன்னாள் கோயில் அறங்காவலரை வழிமறித்து கத்தி முனையில் கொலை மிரட்டல்: அர்ச்சகர் காளிதாஸ் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு