நாடாளுமன்றத்துடன் சட்டசபைக்கு தேர்தல் எடப்பாடி பழனிசாமி ஆசை நிறைவேறாது: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

திருச்சி: சட்டமன்றத்துக்கும், நாடாளுமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் வரவேண்டும் என்ற எடப்பாடி பழனிசாமி ஆசை நிறைவேறாது என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். திருச்சி அரசு மருத்துவமனையில் ரூ.29 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள லிப்ட், ரூ.47 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள திரவ பிராணவாயு கொள்கலன் மற்றும் ரூ.1.23 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி நோய் எதிர்ப்பு குருதி பகுப்பாய்வு இயந்திரங்களை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று திறந்து வைத்தார்.

பின்னர் அவர் அளித்த பேட்டி: திருச்சி, கோவை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில வார்டுகளில் 10 ஆயிரம் பேர், சில வார்டுகளில் 20 ஆயிரம் பேர் உள்ளனர். எனவே மறுவரையறை செய்து வார்டு சீரமைப்பு பணி விரைவில் தொடங்கும். திருச்சியில் மெட்ரோ ஆய்வுகுழு, தங்களுடைய ஆய்வுகளை முடித்த பிறகு தான் பாலம் அமைக்கும் பணி தொடங்கும். சட்டமன்றத்துக்கும், நாடாளுமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் வரவேண்டும் என்பது எடப்பாடி பழனிசாமிக்கு ஆசையாக இருக்கிறது. ஆனால் அது ஒரு போதும் நிறைவேறாது. தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை முதல்வர் வழங்கி வருகிறார். எனவே, சட்டமன்ற தேர்தல் நடக்கின்ற தேதியில் தான் சட்டமன்ற தேர்தல் நடக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

பசுவதை செய்வோரை தலைகீழாக தொங்க விடுவோம் : ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா எச்சரிக்கை

நெல்லை மாவட்ட மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்: மீன்வளத்துறை எச்சரிக்கை

யூடியூபர் சவுக்கு சங்கரை ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திருச்சி நீதிமன்றம் உத்தரவு!!