மாணவியை சில்மிஷம் செய்த 2 ஆசிரியர்களை டிஸ்மிஸ் செய்ய கோரி தனியார் பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர்கள் போராட்டம்: கூடுவாஞ்சேரி அருகே பரபரப்பு

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி அடுத்த வல்லாஞ்சேரியில் பிரபல தனியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த மாதம் 23ம்தேதி பள்ளியில் ஆண்டு விழாவின்போது, யுகேஜி படிக்கும் 5 வயது மாணவியை 2 ஆசிரியர்கள் இருட்டறைக்கு அழைத்து சென்று சில்மிஷம் செய்துள்ளனர். இதனால் மாணவி சோர்வாக இருந்துள்ளார். சந்தேகமடைந்த பெற்றோர் விசாரித்துள்ளனர். நடந்தது குறித்து சிறுமி கூறியுள்ளாள். அதிர்ச்சியடைந்த பெற்றோர், கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் மாலினி வழக்குப்பதிவு செய்து மியூசிக் ஆசிரியரான கூடுவாஞ்சேரி அருகே ஒரத்தூர் அடுத்த நீலமங்கலத்தை சேர்ந்த காயேஷ்குமார் (40), திருநெல்வேலியை சேர்ந்த ராசையா (29) ஆகியோரை நேற்று இரவு போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

பின்னர், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிளை சிறையில் அடைத்தனர். கைதான இருவரும் மற்ற சிறுமிகள் மற்றும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது குறித்து பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால், பள்ளி நிர்வாகத்தை கண்டித்தும், ஆசிரியர்களை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தியும் இன்று காலை 500க்கும் மேற்பட்ட பெற்றோர் தனியார் பள்ளியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

Related posts

43 நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் வட்டாரக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு

மன்னார்குடி அருகே கருத்தநாதபுரத்தில் நாட்டு வெடி தயாரிக்கும் குடோனில் தீ விபத்து: ஒருவர் உயிரிழப்பு

தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்