பண்ருட்டி அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா வீடு உள்பட 6 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை: 15 கோடி மதிப்பிலான 47 சொத்து ஆவணங்கள் பறிமுதல்.

பண்ருட்டி: பண்ருட்டி அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா வீடு உள்பட 6 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை செய்ததில் 15 கோடி மதிப்பிலான 47 சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்துள்ளனர். பண்ருட்டி சென்னை உள்ளிட்ட இடங்களில் முன்னாள் அதிமுக சேர்மன், பன்னீர்செல்வம் மற்றும் ஊழல் தொடர்புடைய ஆறு பினாமிகள் வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டதில் அம்பலமானது.

கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை விடுத்துள்ள பத்திரிகை செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
கடலூர் மாவட்டம், பண்ருட்டி நகராட்சியில் கடந்த 2011-2016ம் ஆண்டுகளில் நகரமன்ற தலைவராக பதவி வகித்த பன்னீர்செல்வம் மற்றும் நகராட்சி ஆணையராக பணிபுரிந்த பெருமாள் ஆகிய இருவரும் பண்ருட்டி பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான இடத்தை வாகன நிறுத்துமிடமாக அமைக்க ஏலம் விட்டதில் சுமார் 20 லட்சம் வரை முறைகேடு செய்திருப்பது தெரிய வந்தது.

இந்த முறைகேடு தொடர்பாக கடலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் 27.02.2024ந்தேதி எதிரிகள் P.பன்னீர்செல்வம், த/பெ, பக்கிரி, முன்னாள் நகர மன்ற தலைவர், பண்ருட்டி நகராட்சி மற்றும் T.பெருமாள், த/பெ, திருவேங்கடம், முன்னாள் நகராட்சி ஆணையர், பண்ருட்டி நகராட்சி ஆகியோர்கள் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து இன்று 28.02.2024ந்தேதி காலை 06.30 மணி முதல் இவ்வழக்கின் எதிரிகள் P.பன்னீர்செல்வம், த/பெ, பக்கிரி, காமராஜ் நகர், பண்ருட்டி, T.பெருமாள், த/பெ, திருவேங்கடம், எண்.17/1, தியாகராஜன் தெரு, ஜவஹர் நகர், பெரம்பூர், சென்னை ஆகியோர்களது வீடுகள் மற்றும் எதிரிகளுடன் தொடர்புடைய குற்ற சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் மற்றும் அவர்களது பினாமிகள் என கருதப்படும் நபர்களான M.பெருமாள், த/பெ, மண்ணாங்கட்டி, கந்தன் பாளையம், பண்ருட்டி, .A.செந்தில்முருகன், த/பெ, ஆறுமுகம், இந்திரா காந்தி சாலை, பண்ருட்டி, M.பிரசன்னா (எ) சம்பத்ராஜ், த/பெ, மீனாட்சிசுந்தரம், எண்.33, கடலூர் மெயின்ரோடு, திருவதிகை, பண்ருட்டி மற்றும் D.மோகன்பாபு, த/பெ, துரைராஜ், எண்.67, சத்தியமூர்த்தி தெரு, பண்ருட்டி ஆகியோர்களது வீடுகளிலும் கடலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ந.தேவநாதன் அவர்கள் தலைமையில் 6 குழுக்கள் வீடு சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையின்போது மேற்சொன்ன குற்ற சம்பவத்தில் தொடர்புடைய ஆவணங்கள், நில மற்றும் மனை சொத்து ஆவணங்கள் மொத்தம் 47 கைப்பற்றப்பட்டன. அவற்றின் சொத்து மதிப்பு ரூ.15,64,32,237/- ஆகும். இந்த முறைகேடு தொடர்பாக தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

Related posts

நெல்லை – சென்னை சிறப்பு ரயில் ஜூன் மாதம் முழுவதும் நீட்டிப்பு: பயணிகள் மகிழ்ச்சி

கன்னியாகுமரியில் 3 நாள் தியானத்தை நிறைவு செய்தார் பிரதமர் நரேந்திரமோடி

திருவள்ளூர் காக்களூரில் பெயிண்ட் ஆலை தீ விபத்தில் இறந்த 4 பேரின் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்