கூடலூர் கிராமத்தில் ரூ.20 லட்சத்தில் ஊராட்சி மன்ற கட்டிடம்: எம்எல்ஏ திறந்து வைத்தார்

மதுராந்தகம்: கூடலூர் கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை எம்எல்ஏ சுந்தர் திறந்து வைத்தார். செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் கூடலூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் ரூ.20 லட்சம் மதிப்பில் புதிதாக ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு அதன் திறப்பு விழா நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் தம்பு முன்னிலை வகித்தார். முன்னதாக, ஒன்றிய கவுன்சிலர் நிர்மலா கோபி வரவேற்றார்.

இதில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ கலந்துகொண்டு ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்தார். பின்னர், சுந்தர் எம்எல்ஏ பேசுகையில், ‘பெண்களுக்கான உரிமைத்தொகை ரூ.1000 விரைவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளார். இந்த ஊராட்சியில் ரேஷன் கடை மற்றும் சமுதாயக்கூடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ஆண்டு விவசாயிகளிடமிருந்து நேரடியாக அரசு நெல் கொள்முதல் செய்யப்பட்டதால் விவசாயிகள் நல்ல பயனடைந்துள்ளனர்’ என்றார்.

முன்னதாக, தண்டரை புதுச்சேரி கிராமத்தில் அங்கன்வாடி மைய கட்டிடம் திறப்பு விழாவில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ கலந்துகொண்டு திறந்துவைத்தார். இந்நிகழ்ச்சியில், துணை பெருந்தலைவர் விஜயலட்சுமி கருணாகரன், கவுன்சிலர் சிவபெருமான், மாவட்ட கவுன்சிலர் மாலதி, காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட மகளிர் தொண்டரணி துணைத்தலைவர் பத்மாவதி தனசேகரன், இளைஞரணி அமைப்பாளர் கிருபாகரன், நிர்வாகிகள் சக்திவேல், அரிதாஸ், சீனிவாசன் உள்ளிட்ட கிராம பொதுமக்கள் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

பாத்திரத்தை மூடாமல் சமைப்பது ஊட்டச்சத்து இழப்பை அதிகரிக்கும்: ஐசிஎம்ஆர் ஆய்வு தகவல்

மாணவர்களுக்கு, சமூகநீதிக்கு, ஏழைகளுக்கு எதிரான நீட் தேர்வை ஆதரிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்: ஒன்றிய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இன்று இயக்கம்: நிர்வாகம் அறிவிப்பு