பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் படர்ந்துள்ள ஆகாய தாமரை செடிகளை அகற்றி மழைநீர் வடிய நடவடிக்கை: அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு

சென்னை: பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் படர்ந்துள்ள ஆகாய தாமரை செடிகளை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு ஜே.சி.பி இயந்திரங்கள் மூலம் அகற்றி மழைநீர் விரைவாக வடிய நடவடிக்கை மேற்கொண்டார். சென்னையில், வேளச்சேரி, அம்பேத்கர் நகர், மடிப்பாக்கம் பாலாஜிநகர், பள்ளிக்கரணை, சாய்பாலாஜி நகர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அமைச்சர் எ.வ.வேலு நேரடியாகச் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5500 அரிசி மூட்டைகள், 11600 பால் பவுடர் பாக்கெட்டுகள், 14000 வாட்டர் பாட்டில்கள், 70000 பிஸ்கெட் பாக்கெட்டுகள், 12000 பிரட் பாக்கெட்டுகள், 17000 ஸ்வீட் பிரட் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பு ஆகிய நிவாரணப் பொருட்களை வழங்கினார். மேலும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் படர்ந்துள்ள ஆகாய தாமரை செடிகளை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு அதனை ஜே.சி.பி இயந்திரங்கள் மூலம் அகற்றி மழைநீர் விரைவாக வடிய நடவடிக்கை மேற்கொண்டார். இந்நிகழ்வின் போது பொதுப்பணித்துறை செயலாளர் சந்திரமோகன், நெடுஞ்சாலை துறை தலைமை பொறியாளர் சந்திரசேகர், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் கே.பி.சத்தியமூர்த்தி மற்றும் நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர்களும், அலுவலர்களும் உடனிருந்து நிவாரணப் பொருட்களை வழங்கினர்.

Related posts

கூடுவாஞ்சேரி – நெல்லிக்குப்பம் சாலையில் அரசு பள்ளியை ஆக்கிரமித்து ஆட்டோக்கள் நிறுத்தம்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

தாய்க்கு கோயில் கட்டி குடமுழுக்கு நடத்திய மகன்கள்

மாமல்லபுரம் அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது