பாலஸ்தீனியர்கள் பலி 30 ஆயிரத்தை கடந்தது

ரபா: இஸ்ரேல் – ஹமாஸ் போரில் பலியான பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கையானது 30ஆயிரத்தை கடந்துள்ளதாக காசா சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த அக்டோபர் 7ம் தேதி முதல் இஸ்ரேல் -ஹமாஸ் இடையே போர் நடந்து வருகின்றது. இதில் இஸ்ரேல் தாக்குதலில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் பலியாகி வருகின்றனர்.

நேற்று 86 சடலங்கள் உள்ளூர் மருத்துவமனைகளுக்கு எடுத்து வரப்பட்டது. மேலும் 113 பேர் காயமடைந்து சிகிச்சைக்கு வந்திருந்தனர். இஸ்ரேல் -ஹமாஸ் போரில் பலியானவர்களின் எண்ணிக்கையானது 30,717 ஆக அதிகரித்துள்ளது. பலியானவர்களில் மூன்றில் இரண்டு பங்கு பேர் பெண்கள் மற்றும் சிறுவர்கள். மேலும் சுமார் 72000 பேர் காயமடைந்துள்ளனர்.

Related posts

இண்டியா கூட்டணிக்கு மக்கள் கொடுத்துள்ள வரவேற்பு கோட்சேவைக் கொண்டாடும் கூட்டத்தின் ஆட்டம் முடிவுக்கு வருவதை உணர்த்தியுள்ளது : ஜவாஹிருல்லா

இந்தியாவை பிரதிபலிக்கிறது உத்திர பிரதேச தேர்தல் முடிவுகள்; சரத் பவார்

ராமர் கோவில் உள்ள அயோத்தியில் பாஜகவுக்கு தொடர்ந்து பின்னடைவு: ஃபைசாபாத்தில் சமாஜ்வாதி வேட்பாளர் முன்னிலை