எடப்பாடி முன்னிலையில் தொண்டனுக்கு ‘பளார்’

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருப்பத்தூர், ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் திருப்பத்தூர் வந்தார். அங்கு முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு சொந்தமான தனியார் நட்சத்திர ஓட்டலில் தங்கினார். அப்போது எடப்பாடியை வரவேற்க தொண்டர்கள் வந்தனர்.

திடீரென கூட்டத்தில் இருந்த அதிமுகவை சேர்ந்த ஒரு தொண்டர், ‘எடப்பாடி, வாழ்க வாழ்க’ என கோஷமிட்டபடி எடப்பாடி வாகனத்தின் அருகே சென்றார். அப்போது அங்கிருந்த அதிமுகவினர் அவரது கன்னத்தில் ‘பளார்’ என அறைவிட்டு இழுத்து ஓரமாக தள்ளியதாக கூறப்படுகிறது. இதனால் அந்த தொண்டர் நிலைகுலைந்தார். இந்த சம்பவம் அதிமுக தொண்டர்களிடையே அதிருப்தியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Related posts

ஜம்மு-காஷ்மீரில் 4-வது முறையாக தீவிரவாதிகள் தாக்குதல்: பிரதமர் மோடி பதிலளிக்க ராகுல்காந்தி வலியுறுத்தல்

ஜூன் 13: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

பலாப்பழக்காரரின் ரகசிய ஆலோசனை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா