நியூசி.யுடன் 4வது டி20யிலும் பாகிஸ்தான் தோல்வி

கிறைஸ்ட்சர்ச்: நியூசிலாந்து அணியுடனான 4வது டி20 போட்டியிலும், பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ஹேக்லி ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீசியது. பாகிஸ்தான் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 158 ரன் குவித்தது. முகமது ரிஸ்வான் 90 ரன் (63 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்), முகமது நவாஸ் 21, பாபர் 19 ரன் எடுத்தனர். நியூசி. பந்துவீச்சில் ஹென்றி, பெர்குசன் தலா 2, மில்னே 1 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து 18.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 159 ரன் எடுத்து வென்றது. ஷாகீன் அப்ரிடி வேகத்தில் ஆலன் (8), செய்பெர்ட் (0), வில் யங் (4) அணிவகுத்த நிலையில், டேரில் மிட்செல் – கிளென் பிலிப்ஸ் ஜோடி அதிரடியாக விளையாடி அசத்தியது. டேரில் 72 ரன் (44 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்), பிலிப்ஸ் 70 ரன்னுடன் (52 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். டேரில் ஆட்ட நாயகன் விருது பெற்றார். நியூசி. 4-0 என முன்னிலை வகிக்க, 5வது மற்றும் கடைசி டி20 இதே மைதானத்தில் நாளை நடக்கிறது.

Related posts

டி20 உலகக் கோப்பை: வங்கதேச அணிக்கு எதிரான பயிற்சிபோட்டியில் 182 ரன்களை குவித்தது இந்திய அணி

ஜூன் 4ல் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

நரேந்திர மோடி மீண்டும் பிரதமரானால் மொட்டையடித்துக் கொள்வேன் ஆம் ஆத்மி எம்எல்ஏ சோம்நாத் பார்த்தி