பாக். தீவிரவாத தாக்குதலில் 11 தொழிலாளர்கள் பலி

பெஷாவர்: பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் வஜிரிஸ்தான் மாவட்டத்தில் ஷாவால் தாலுகா அருகே குல் மிர் காட் பகுதியில் 16 தொழிலாளர்கள் சென்ற வாகனத்தின் மீது தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ததாக செய்தி வெளியானது. இதில் 11 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும், 2 தொழிலாளர்கள் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளனர். 3 தொழிலாளர்கள் மாயமாகினர். உயிரிழந்த மற்றும் காயமடைந்த தொழிலாளர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மாயமான தொழிலாளர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Related posts

காரில் மண்டை ஓடுகளுடன் வந்த அகோரியால் பரபரப்பு

தமிழ்நாட்டில் முதன்முறையாக ராமநாதபுரத்தில் பயன்பாட்டுக்கு வந்தது இயற்கை எரிவாயு மூலம் இயக்கப்படும் அரசு பஸ்கள்

திமுக-காங். கூட்டணியில் எந்த மாற்றமும் இல்லை 5 மாதங்களில் பாஜ ஆட்சி கவிழும்: ஈவிகேஎஸ்.இளங்கோவன் பரபரப்பு பேட்டி