நம்பிக்கை வாக்கெடுப்பில் பாக். பிரதமர் ஷெபாஸ் வெற்றி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் வெற்றி பெற்றார். பாகிஸ்தானில் நீதித்துறை, அரசுக்கு இடையேயான கருத்து மோதல் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், பிரதமர் ஷெபாஸ் தனிப் பெரும்பான்மை உடன் ஆட்சி செய்வதை நிரூபிக்கும் வகையில் அந்நாட்டி வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி நாடாளுமன்றத்தின் மக்களவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கான தீர்மானத்தை தாக்கல் செய்தார்.

இதில் மொத்தம் உள்ள 342 எம்பி.க்களில், 180 எம்பி.க்கள் இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். பிரதமர் ஷெரிப் தனக்கு ஆதராவக வாக்களித்த உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்தார். பிரதமராக கடந்தாண்டு ஏப்ரலில் தேர்வான போது கூட ஷெரிப் 174 வாக்குகளை மட்டுமே பெற்று இருந்தார் .

Related posts

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்