பெயின்டர் தூக்கிட்டு தற்கொலை

ஆவடி: ஆவடி அருகே பெயின்டர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். ஆவடியை அடுத்த பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்தவர் நாசர்(47). இவர் பெயிண்டர் வேலை செய்து வந்தார். இவருக்கு சித்ரா என்ற மனைவியும், சரவணன்(16) என்ற மகனும், ஸ்வேதா(15) என்ற மகளும் உள்ளனர். தினந்தோறும் வேலைக்குச் சென்று, அதில் வரும் பணத்தில் மது அருந்திவிட்டு வருவதை நாசர் வழக்கமாக கொண்டிருந்தார். இதனை மனைவி சித்ரா கண்டித்ததால், வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாதபோது, படுக்கை அறைக்குச் சென்ற நாசர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தூக்கில் பிணமாக தொங்கியதைப் பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர். நாசரின் உடலை பட்டாபிராம் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லத்தடை விதிப்பு..!!

காஞ்சிபுரம் அருகே பெண் காவலரை வெட்டிய சம்பவத்தில் கணவன் கைது!!

கலைஞரின் கனவு இல்லம் திட்டம் ஜூலை மாதம் தொடங்க தமிழ்நாடு அரசு திட்டம்