சென்னையில் இருந்து நெல்லை வந்த அரசு விரைவுப் பேருந்தில் இருந்து துப்பாக்கி, அரிவாள் பறிமுதல்..!!

நெல்லை: சென்னையில் இருந்து நெல்லை வந்த அரசு விரைவுப் பேருந்தில் இருந்து துப்பாக்கி மற்றும் அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இருந்து நெல்லைக்கு வந்த அரசு விரைவு பேருந்து துப்பாக்கி மற்றும் அறிவாள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று சென்னையில் இருந்து புறப்பட்ட அரசு விரைவுப்பேருந்து இன்று காலை 11 மணியளவில் நெல்லை வண்ணாரப்பேட்டை பணிமனைக்கு வந்தது.

இதனை தொடர்ந்து பணிமனையில் பேருந்தை ஊழியர்கள் சுத்தம் செய்யும்போது துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து விரைவு போக்குவரத்து மேலாளர் மூலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து பாளையங்கோட்டை ஆய்வாளர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பந்தப்பட்ட அரசு பேருந்தில் தடய அறிவியல் துறையினர், கைரேகை நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

மக்களவை சபாநாயகர் பதவி யாருக்கு என்பதில் தேசிய ஜனநாயக கூட்டணியில் கடும் போட்டி

முள்ளிகிராம்பட்டில் குளத்தை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி தூர்வார வேண்டும்

ஏரியை ஆக்கிரமித்துள்ள காட்டாமணக்கு செடிகள் அகற்றப்படுமா?