ஓவர் கான்பிடன்ஸ் வேணாம்..! தொண்டர்களுக்கு ராமதாஸ் கடிதம்

பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதம்:
தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகள் தீர்மானிக்கப்படுவதற்கு இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ளன. ஆனால், அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் களத்தில் நீ உழைத்துக் கொண்டிருப்பதை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். பல நேரங்களில் வியந்து கொண்டிருக்கிறேன். இந்த உழைப்பு தான் தமிழ்நாட்டில் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல்களில் நமக்கு மிகப் பெரிய வெற்றியைத் தேடித்தரப் போகிறது.

என்னைப் பொறுத்தவரை பாமக சார்பில் களமிறங்கியுள்ள 10 பேர் உட்பட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 40 பேரும் நாடாளுமன்றத்துக்கு செல்ல வேண்டும். இந்த தேர்தல் குறித்த நமது கனவு நனவாக வேண்டும் என்றால், அதற்கு உன் உழைப்பு இன்னும் 4 நாட்களுக்குத் தொடர வேண்டும். அதிக நம்பிக்கை அலட்சியமாக மாறிவிடக்கூடாது. எனவே, அடுத்த 4 நாட்களுக்கு நீங்கள் மிகவும் விழிப்புடனும், கடமை உணர்வுடனும் தேர்தல் பணியாற்ற வேண்டும்.

Related posts

பலாப்பழக்காரரின் ரகசிய ஆலோசனை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

கொடைக்கானல் ஏரிக்குள் பாய்ந்த கார்

புதுச்சேரியில் விஷவாயு தாக்கி 3 பெண்கள் பலி 2 விசாரணைக்குழு அமைப்பு