வெளிச்சந்தையில் மது விற்றவர் கைது

 

திருவிடைமருதூர், நவ.9: திருவிடைமருதூர் அருகே வெளிச்சந்தையில் மதுபான பாட்டில்கள் விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.திருவிடைமருதூர் அருகே பருத்திச்சேரி வடக்கு தெருவில் வசிப்பவர் மருதையன் மகன் சிவக்குமார் (54). இவர் அடிக்கடி டாஸ்மாக்கில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி வந்து வீட்டில் பதுக்கி வைத்து பின்னர் கூடுதல் விலைக்கு வெளிச்சந்தையில் விற்பதாக புகார் எழுந்தது. இதனால் பலமுறை கைது செய்யப்பட்டு சிறை சென்றுள்ளார். இந்நிலையில் மீண்டும் மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பதாக நாச்சியார்கோவில் போலீசுக்கு தகவல் வந்தது. போலீசார் சென்று சோதனையிட்டபோது டாஸ்மாக் கடையில் வாங்கிய தலா 180 மில்லி கொண்ட 20 குவார்ட்டர் பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தார். அவற்றை போலீசார் கைப்பற்றி அவரை கைது செய்து கும்பகோணம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் கிளை சிறையில் அடைத்தனர் .

Related posts

திருத்தங்கல்லில் சாலையின் நடுவே ஏற்பட்ட பள்ளத்தை மூட வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

வில்லிபுத்தூர் அருகே இலவச தென்னை கன்றுகள் வழங்கல்

குறைவான செலவில் குச்சி முருங்கை சாகுபடி செய்து நிரந்தர வருமானம் பெறலாம்: வேளாண்துறை ஆலோசனை