அதிமுக மற்றும் பொதுமக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஓ.பன்னீர்செல்வம்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: “அதிமுகவுக்கும் ஓபிஎஸ்க்கும் இனி எந்த காலத்திலும் தொடர்பில்லை என சென்னையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு இடைக்கால தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை தொடர்ந்து அதிமுகவினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது; தர்மயுத்தம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றி வந்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பின் மூலம் மரண அடி கொடுத்துள்ளது. இனி எந்த காலத்திலும் ஓபிஎஸ், அதிமுக உறுப்பினர் என்றும், அதிமுக கரை வேட்டியை கட்டவோ, சின்னம் கொண்ட லெட்டர் பேடுகளை உபயோகிக்கவோ முடியாது. இனி எந்த காலத்திலும் ஓபிஎஸ் அதிமுக என்று சொல்ல முடியாது. எப்போதும் அதிமுக கரை வேட்டி, இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த முடியாது. இன்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வரவேற்கத்தக்கது. அதிமுக மற்றும் பொதுமக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஓ.பன்னீர்செல்வம் இவ்வாறு கூறினார்.

Related posts

நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஒரு வாரம் இங்கிலாந்தில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய 25 மாணவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

பக்தர்கள் அளிக்கும் காணிக்கை மோசடி தொடர்பாக பேசியதால் முன்னாள் கோயில் அறங்காவலரை வழிமறித்து கத்தி முனையில் கொலை மிரட்டல்: அர்ச்சகர் காளிதாஸ் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு

மேகதாது பிரச்சனையில் தமிழ்நாடும், கர்நாடகமும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர் பேசியதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்