ஓபிஎஸ், டிடிவி உள்பட 5 வேட்பாளர்கள் மீது வழக்கு

தேனி: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பாஜ கூட்டணி சார்பில் தேனி மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார். இவர், நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக கட்சிக் கொடி கட்டிய பிரசார வேனில் தொண்டர்களுடன் தேனி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த தேனி இன்ஸ்பெக்டர் உதயகுமார் மீது அவர் வந்த வேன் மோதும் வகையில் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தேர்தல் கண்காணிப்புக் குழு அலுவலர் நீதிநாதன் தேனி போலீசில் அளித்த புகாரின்பேரில் அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் டிடிவி தினகரன், அமமுக நிர்வாகி ராம்பிரசாத் உள்பட பலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்காக கடந்த 25ம் தேதி காலை 11 மணிக்கு மேல் இந்திய முஸ்லீம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ்கனி, ஓபிஎஸ், அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள் ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் தேர்தல் விதியை மீறி நூற்றுக்கணக்கான வாகனங்களில் அணிவகுத்து வந்தனர். ஓபிஎஸ் வந்த பிரசார வாகனம் கலெக்டர் வளாக பகுதிக்கு சென்றது. இதனால், தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை மீறியதாக ஓபிஎஸ், நவாஸ்கனி எம்பி மற்றும் ஜெயபெருமாள் உள்ளிட்டோர் மீது, கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதேபோல், சேலம் தொகுதி பாமக வேட்பாளர் அண்ணாதுரைவேட்பு மனு தாக்கல் செய்ய வந்தபோது போலீசாருடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதால் பாமக வேட்பாளர் உள்பட 49பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related posts

4ம் கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 1,710 பேரில் 360 பேர் மீது கிரிமினல் வழக்கு: 476 பேர் கோடீஸ்வரர்கள்; 24 பேரிடம் சொத்து இல்லை

துறைவாரியான செயல்திட்டங்களை ஒருங்கிணைத்து போதைப்பொருளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முடிவு

பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த 3 பேர் கைது!