ஓபிஎஸ்சுக்கு ரூ.9.79 கோடி சொத்து; டிடிவிக்கு ரூ.4.95 கோடிதான் சொத்து

ராமநாதபுரம்: ராமநாதபுரம் தொகுதியில் பாஜ கூட்டணியில் சுயேட்சை வேட்பாளராக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த 25ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார். இதில் அவர் சொத்து மதிப்பை தாக்கல் செய்தார். அதில் தனது பெயரில் அசையும் சொத்துக்கள் ரூ.1,11,33,138, அசையா சொத்துக்கள் ரூ.7,80,99,707, மறைந்த தனது மனைவி பெயரில் அசையும் சொத்து ரூ.10,17,694 மற்றும் அசையா சொத்துக்கள் ரூ.76,99,838 என மொத்தம் ரூ.9,79,60,377 மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாக கணக்கு காட்டியுள்ளார். தனது பெயரில் ரூ.1,52,85,226 கடன் உள்ளது எனவும், தன் மீது காவல்துறையில் 5 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது எனவும், எந்த வழக்கிலும் தண்டனை வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

தேனி தொகுதி பாஜ கூட்டணி வேட்பாளரான அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரனுக்கு அசையும் சொத்துக்களாக ரூ.19 லட்சத்து 82 ஆயிரத்து 973, அசையா சொத்துக்களாக ரூ.57லட்சத்து 44 ஆயிரத்து 008, மொத்தமாக டிடிவி பெயரில் ரூ.77 லட்சத்து 26 ஆயிரத்து 981 மதிப்புக்கு சொத்துக்கள் உள்ளன. டிடிவி தினகரன் மனைவி அனுராதா பெயரில் அசையும் சொத்துக்களாக ரூ.1 கோடியே 69லட்சத்து 25ஆயிரத்து 118, அசையா சொத்துக்களாக ரூ.2 கோடியே 48 லட்சத்து 79 ஆயிரத்து 707. இருவருக்கும் சேர்த்து மொத்தமாக ரூ.4 கோடியே 95 லட்சத்து 31ஆயிரத்து 806 மதிப்புக்கு சொத்துக்கள் உள்ளன. மேலும், டிடிவி தினகரனுக்கு ரூ.9லட்சத்து 25 ஆயிரத்து 029 வங்கி மற்றும் தனிநபர் கடனாகவும், ஒன்றிய அரசு விதித்துள்ள பெரா நீதிமன்ற அபராத நிலுவையாக ரூ.28 கோடியும் உள்ளது. மனைவி அனுராதா பெயரில் ரூ.22 லட்சத்து 87 ஆயிரத்து 960 கடன் உள்ளது. மேலும், டிடிவி மீது 9 வழக்குகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

நஞ்சராயன் குளத்திற்கு உள்நாட்டு பறவைகள் வருகை அதிகரிப்பு

3 ஆண்டுகளில் ரூ.3,198 கோடியில் 28,824 அடுக்குமாடி குடியிருப்புகள் திறந்து நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் புதிய சாதனை

குமாரபாளையத்தில் பள்ளி வாகனங்கள் வருடாந்திர ஆய்வு: 40 வாகனங்கள் திருப்பி அனுப்பி வைப்பு