டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை ஏற்பாட்டில் 1500 கண் மருத்துவ நிபுணர்கள் பங்கேற்ற விழித்திரை கருத்தரங்கம்

சென்னை: சென்னையில் 1500 கண் மருத்துவ நிபுணர்கள் பங்கேற்ற மிகப்பெரிய விழித்திரை கருத்தரங்கம் ‘ரெட்டிகான் 2024’ டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை ஏற்பாட்டில் நடைபெற்றது. சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் விழித்திரை துறை சார்பில் இந்தியாவின் மிகப்பெரிய கருத்தரங்கம் “ரெட்டிகான் 2024” நடைபெற்றது. இதனை தமிழ்நாடு அரசு மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இயக்குநர் சங்குமணி தொடங்கி வைத்தார்.

இந்தியாவில் பார்வையின்மைக்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கும் விழித்திரை கோளாறுகளை சரி செய்ய மிக நவீன உத்திகள், தொழில்நுட்பங்கள் மற்றும் சிகிச்சைமுறையியல்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த கருத்தரங்கில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சிறப்பு நிபுணர்கள் மற்றும் கண் மருத்துவர்கள் உள்ளிட்ட 1500 கண் மருத்துவ நிபுணர்கள் பங்கேற்றனர். மேலும் விட்ரியோ-ரெட்டினல் அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் தலைமை வணிக அதிகாரி டாக்டர் அசார் அகர்வால், விட்ரியோ-ரெட்டினல் அறுவை சிகிச்சை துறை தலைவர் டாக்டர் எஸ்.சௌந்தரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

டாக்டர் எஸ்.சௌந்தரி அளித்த பேட்டி: சர்க்கரை நோய் ஏற்பட்டால் முதலில் விழித்திரை பாதிப்பு ஏற்படும். பின்னர் பார்வை பாதிக்கப்படும். எனவே உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். விழித்திரையில் பிரச்னை ஏற்பட்டால் சிலருக்கு அறிகுறிகள் தெரியாது, எனவே கண் பரிசோதனை செய்து கண்டுபிடித்து அதற்கேற்றவாறு சிகிச்சைகள் அளிக்கப்படும். அனைவரும் வருடம் ஒருமுறை கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

இந்த கருத்தரங்கின் மூலம் மருத்துவர்களுக்கு நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய சிகிச்சைகள்‌ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பல லட்சம் மக்கள் பயனடைவார்கள். இக்கருத்தரங்கின் நோக்கம் லட்சக்கணக்கான மக்களுக்கு தரமான விழித்திரை சிகிச்சைகள் சென்றடைய வேண்டும். கண்களில் ஏதேனும் வலி, பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். தமிழ்நாடு அரசு முதல்வர் காப்பீடு திட்டங்கள் மூலமாக விழித்திரை சிகிச்சைகள் முழுவதும் இலவசமாக அளிக்கப்படுகிறது‌. இவ்வாறு கூறினார்.

 

Related posts

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் இன்று தொடக்கம்

தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்

இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்