ஓணம் பண்டிகை, ஆவணி முகூர்த்தங்களால் தேங்காய் விலை கிடுகிடு உயர்வு: டன் ரூ.22000க்கு விற்பனை

சேலம்: தமிழகத்தில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர், தாராபுரம், உடுமலைப்பேட்டை, கோபிச்செட்டிபாளையம், திருநெல்வேலி உள்பட பல பகுதிகளில் தென்னை மரங்கள் அதிகளவில் உள்ளன. இப்பகுதிகளில் பறிக்கப்படும் தேங்காயை விவசாயிகள் தமிழகத்தில் பல பகுதிகளுக்கும், இதைதவிர கேரளா, ஆந்திரா, கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்புகின்றனர். கடந்த சில மாதங்களாக வழக்கத்தை காட்டிலும் தேங்காய் வரத்து அதிகரித்தது. இதனால் விலை சரிவை சந்தித்தது. இந்நிலையில் ஆவணி மாத தொடர் முகூர்த்தங்கள், ஓணம் பண்டிகை காரணமாக தேங்காய் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இது குறித்து சேலம் சரகத்தை சேர்ந்த தேங்காய் வியாபாரிகள் கூறியதாவது: தேங்காய் அளவை பொறுத்து கடந்த மாதம் ரூ.5முதல் ரூ.15 வரை விற்கப்பட்டது. அது தற்போது ரூ.10முதல் ரூ.25வரை விற்கப்படுகிறது. இதேபோல் கடந்த மாதம் ரூ.20 ஆயிரமாக இருந்த 1 டன் தேங்காய் தற்போது ரூ.22 ஆயிரமாக விலை உயர்ந்துள்ளது. இவ்வாறு வியாபாரிகள் கூறினர்.

Related posts

திருவள்ளூர் காக்களூர் சிப்காட் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4-ஆக உயர்வு

வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் தொடங்கியது!!

தாய்ப்பால் விற்பனை.. 18 குழுக்கள் அமைத்து மாநிலம் முழுவதும் கண்காணிப்பு தீவிரம்: உணவு பாதுகாப்புத்துறை தகவல்