சித்தூரில் ஜனசேனா கட்சி சார்பில் நடந்த இலவச மருத்துவ முகாமில் 400 பேருக்கு சிகிச்சை

சித்தூர் : சித்தூரில் ஜனசேனா கட்சி சார்பில் நேற்று இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.சித்தூர் 31வது வார்டில் உள்ள ராம் நகர் காலனியில் ஜனசேனா காட்சியின் இளைஞரணி மாவட்ட தலைவர் ராம் தலைமையில் இலவச மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. இதில் பிரபல தனியார் மருத்துவமனையின் மருத்துவர்கள் கொண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர். முகாமில் 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனைகளை பெற்றனர்.

அதன் பின்னர், மாவட்ட தலைவர் ஸ்ரீராம் பேசுகையில், ‘ ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் ஆலோசனையின்படி சித்தூர் மாநகரத்தில் இலவசமாக மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமில் கண், காது, இதயம், சர்க்கரை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நோய்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் குறைபாடுள்ளவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது. மேலும் கண் பரிசோதனை மேற்கொண்டவர்களுக்கு இலவச கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டது.

இதேபோல் சித்தூர் மாநகரத்தில் அனைத்து வார்டுகளிலும் ஜனசேனா கட்சி சார்பில் இலவச மருத்துவ முகாம் நடத்தப்படும். ஆகவே பொதுமக்கள் அந்தந்த வார்டுகளில் நடைபெறும் மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பரிசோதனை செய்து பயன்பெற வேண்டும்‘ என பேசினார்.
இதில், கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி 295 தொகுதிகளில் வெற்றி பெறும்: கார்கே திட்ட வட்டம்

சென்னை கொரட்டூரில் வளர்ப்பு நாய் கடித்து 12 வயது சிறுவன் பலத்த காயம்

இடைக்கால ஜாமினை நீட்டிக்கக் கோரி டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மனு