ஆம்னி பஸ் கவிழ்ந்து 29 பேர் படுகாயம்

ஆரணி: ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து வேலூர், ஆரணி வழியாக மதுரைக்கு நேற்று முன்தினம் இரவு தனியார் ஆம்னி பஸ் டிரைவர்கள் உட்பட 27 பயணிகளுடன் புறப்பட்டது. நேற்று அதிகாலை 1.30 மணியளவில் ஆரணி- சேத்துப்பட்டு செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அங்கு பஞ்சாரகி டிராக் டர் ஒன்று நின்று இருந்தது.அந்த டிராக்டரை ஆம்னி பஸ் கடந்து செல்ல முயன்றபோது சேத்துப்பட்டில் இருந்து ஆரணி நோக்கி டிப்பர் லாரி ஒன்று எதிரே வேகமாக வந்துள்ளது. இதனை கண்டதும் ஆம்னி பஸ் டிரைவர், டிராக்டர் மற்றும் லாரி மீது மோதாமல் இருக்க பஸ்சை இடது புறமாக திருப்பினார். இதில், நிலை தடுமாறிய ஆம்னி பஸ் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிரைவர்கள் உட்பட 29 பேருக்கு படுகாயமடைந்தனர்.

Related posts

ஆர்எஸ்எஸ் உடனான மோதலுக்கு மத்தியில் ஓபிசி, தலித், பெண் தலைவர்களை தேடும் பாஜக: மகாராஷ்டிரா, அரியானா தேர்தலுக்கு முன் நியமிக்க முடிவு

குவைத் தீவிபத்தில் தமிழர்கள் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

3 நாட்களில் 3 தீவிரவாத தாக்குதல்: 6 ராணுவ வீரர்கள் படுகாயம் ஒரு தீவிரவாதி பலி.! ‘காஷ்மீர் டைகர்’ என்ற அமைப்பு பொறுப்பேற்பு