ஒமேகா 3

நன்றி குங்குமம் தோழி

ஒமேகா 3 என்பது நம் உடலிற்கு நன்மை செய்யும் பன்மை நிறைவுறாக் கொழுப்பு அமிலமாகும். ஒமேகா 3 ெகாழுப்பு அமிலம் இயற்கையாக நம் உடலில் உருவாகுவதில்லை. இது நாம் உண்ணும் உணவின் மூலம் நமக்கு கிடைக்கின்றது.இது சருமப் பாதுகாப்பிற்காகவும், முகப்பரு பிரச்னையை குறைப்பதற்கும் பெரிதும் உதவுகிறது. இது கரடுமுரடான வறண்ட சருமத்தை மென்மையாக்கி, எரிச்சல், தோல் அலர்ஜி, சருமத்தின் வறட்சி, சிவந்து காணப்படுதல் மற்றும் அரிப்பு ஏற்படுதல் போன்ற அறிகுறிகளுக்கு எதிராக செயல்பட்டு சருமத்தை பாதுகாக்கிறது.

ஒமேகா 3 இதய ரத்தநாள செயல்பாடு, ஆரோக்கியமான மூளை வளர்ச்சி, புற்றுநோய், மன அழுத்தம், நினைவுத்திறன் குறைபாடு போன்ற பல பிரச்னைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் பெரிய பங்காற்றுகிறது. இது ட்ரைகிளிசரைட் அளவை குறைப்பதால் இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைகிறது.மேலும் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கவும், நோய் எதிர்ப்புத்திறனை அதிகரித்து சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் பெரிதும் உதவுகிறது.

சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்களுக்கு எதிராக செயல்படுகிறது. இது சருமத்தின் சீரான நிறத்தை மேம்படுத்தி வயதான தோற்றத்தை குறைக்கும் தன்மையுடையது.எண்ணெய் சத்துள்ள மீன், வால்நட், ப்ளாக்ஸ் சீட் எனப்படும் ஆளி விதை, எலுமிச்சை, கொய்யா, பீன்ஸ், சியா விதைகள் ஆகியவை ஒமேகா 3 நிறைந்துள்ள உணவுப்பொருட்களாகும். அக்ரூட் பருப்புகள் சரும செல்களுக்கு ஈரப்பதத்தைக் கொடுக்கிறது. மேலும் தீங்கு விளைவிக்கும் புற ஊதாக்கதிர்களுக்கு எதிராகவும் செயல்படுகிறது.சியா விதைகளை சாலட் அல்லது ஸ்மூத்திகளில் ஜூஸ் பொருளாக பயன்படுத்தலாம். இதனை பாலுடன் கலந்து உண்ணலாம். சியா விதைகளை தண்ணீரில் ஊற வைத்தும் குடிக்கலாம்.

ஆளிவிதையில் மெக்னீசியம், இரும்பு, நார்ச்சத்து மற்றும் அதிக அளவு ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இது சருமத்திற்கு ஊட்டம் அளிக்கிறது.ெகண்டை, கானாங்கெளுத்தி, மத்தி, நெத்திலி, சூரை போன்ற மீன் வகைகளில் அதிக அளவு ஒமேகா 3 நிறைந்துள்ளது. இதனை தினமும் உட்கொண்டு வர சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ஒமேகா 3 அதிகமுள்ள உணவுகளை அனுதினமும் உட்கொண்டு வர சரும பாதுகாப்பு மேம்பாடு அடைந்து கூந்தலும் பலப்படும்.

– ச.லெட்சுமி, தென்காசி.

Related posts

சிறுநீரகம் காப்போம்… சிறப்பாய் வாழ்வோம்!

குதிகால் வலி

ஹெப்படைட்டிஸ் அலெர்ட் ப்ளீஸ்!