ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை ஒருபோதும் தலைமைச் செயலகமாக மாறாது: மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை ஒருபோதும் தலைமைச் செயலகமாக மாறாது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் கிண்டி அரசு மருத்துவமனையில் ரூ.8.72கோடி மதிப்புள்ள நவீன டெஸ்லா ஸ்கேன் இயந்திரத்தை திறந்துவைத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், 500க்கு மேற்பட்ட முறை இந்த பதிலை கூறிவிட்டேன்; ஓமந்தூரார் மருத்துவமனை தலைமைச் செயலகமாக மாறாது.

டெங்குவால் எந்த பாதிப்பும் இல்லை; இறப்பும் இல்லை. கடந்த ஆட்சியில் நிலத்தடி நீர் இல்லாத பகுதியில் மருத்துவமனைகள் கட்டப்பட்டுள்ளன. சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை பன்னோக்கு மருத்துவமனையாகவே இயங்கும். அதிமுக நிர்வாகியின் நில மதிப்பை கூட்ட, திட்டமில்லாமல் மருத்துவமனை கட்டியுள்ளனர். தற்போது திறப்பதற்கு ஆர்ப்பாட்டம் செய்வது மக்களை ஏமாற்றும் செயல் இவ்வாறு தெரிவித்தார்.

Related posts

நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்: எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வாழ்த்து

குமரியில் கடல் அலைகள் சுமார் 10 அடி உயரத்துக்கு எழுவதால் எச்சரிக்கை

கேரள மாநிலம் இன்றும் 2-வது நாளாக நில அதிர்வு