ஒடிசாவில் கோர ரயில் விபத்து மனம் உடைந்தது… ஏற்க முடியாத அலட்சியம்: நடிகர், நடிகைகள் கருத்து

சென்னை: ஒடிசாவில் நடந்த கோர ரயில் விபத்து குறித்து நடிகர், நடிகைகள் தங்களது கருத்தையும் இரங்கலையும் தெரிவித்துள்ளனர்.

அதன் விவரம்:
கமல்ஹாசன்: ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே இரு பயணிகள் ரயில்களும், ஒரு சரக்கு ரயிலும் மோதிக் கொண்ட விபத்தில் 280க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதும் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. நாட்டையே உலுக்கியுள்ள இந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது நம் வேதனையை அதிகரிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுமென விழைகிறேன். உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த ரயில் விபத்து, இந்திய வரலாற்றின் மாபெரும் துயரங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது.

சிரஞ்சீவி: ஒடிசாவில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்து மற்றும் பெரும் உயிர் இழப்புகள் அதிர்ச்சி தருகிறது. உயிரிழந்த குடும்பங்களுக்கு என் இதயத்திலிருந்து ஆறுதல்கள். உயிர்களைக் காப்பாற்ற இரத்தப் பிரிவுகளுக்கான அவசரத் தேவை இருப்பதை நான் புரிந்துகொள்கிறேன். உயிர்காக்கும் இரத்த அலகுகளை தானம் செய்வதற்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குமாறு எங்கள் ரசிகர்கள் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் உள்ள நல்ல சமானியர்கள் அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளேன்.

சல்மான் கான்: விபத்து குறித்து கேள்விப்பட்டு மிகவும் வருத்தமாக உள்ளது, இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவன் உதவட்டும். இந்த துரதிர்ஷ்டவசமான விபத்தில் காயமடைந்தவர்களின் குடும்பங்களை பாதுகாத்து வலிமை கொடுக்க வேண்டும்.

ஜூனியர் என்டிஆர்: சோகமான ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கும் அவர்களது அன்புக்குரியவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.
யஷ்: ஒடிசாவின் ரயில் விபத்து சோகம் எவ்வளவு இதயத்தை உலுக்கியது என்பதை வார்த்தைகளில் விவரிப்பது கடினம். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். மீட்புப் பணிகளில் திரளாக வந்து உதவிய மக்களுக்கு நன்றி.
பிரியா ஆனந்த்: மனம் உடைந்து போய் விட்டது. இது ஏற்றுக் கொள்ள முடியாத அலட்சியம்.

Related posts

பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த 3 பேர் கைது!

சிவகங்கை கப்பல் நாகை வந்தது; இலங்கைக்கு 13ம் தேதி முதல் போக்குவரத்து.! நாளை சோதனை ஓட்டம்

உலக செவிலியர் நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!